மும்பை, நவ. 14 - மகாராஷ்டிராவின் நாசிக் மாவட் டத்தில் உள்ள கல்வான் (பழங்குடி) சட்டமன்ற தொகுதியில் மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணி யின் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. காவிட் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஜே.பி. காவிட்டுக்கு வாக்குசேகரித்து, நாசிக் சாலையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் உதய் நர்கர் மற்றும் சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), கஷ்டகாரி சங்கதனா உள்ளிட்ட கூட்ட ணிக் கட்சிகளின் தலைவர்கள் ஜே.பி. காவிட்-டை ஆதரித்து உரையாற்றி னர். எம்விஏ கூட்டணியின் தொண்டர் கள் ஆயிரக்கணக்கானோர் திர ளாக பங்கேற்றனர்.