states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நோயாளிகள் நலன் கருதி வேலைநிறுத்தம் வாபஸ்

இன்று முதல் மருத்துவர்கள்  பணிக்குத் திரும்புகின்றனர்!

சென்னை, நவ. 14 - சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்து வமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளியின் உறவினர் ஒருவரால் சரமாரியாக கத்திக்குத்துக்கு ஆளானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளி மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும், வருங் காலங்களில் இது போன்ற நிகழ்வு கள் நடக்காமல் தடுக்க வழிகாட்டு தல்களை உருவாக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற  சிகிச்சைகள், மருத்துவ மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகியவை ஸ்தம்பித்தன. தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், வியாழனன்று (நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.  சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, “நாளைமுதல் பணியை தொடரவுள்ளோம். நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது” என அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தெரி வித்துள்ளார். அடுத்த மாதம் இதேதேதியில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சீராய்வு கூட்டம் நடத்தவும் அரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“கர்நாடக பாஜகவின் கொரோனா ஊழலை பற்றி மோடி பேச மாட்டாரா?

“முந்தைய கர்நாடக பாஜக அரசில் நிகழ்ந்த கொரோனா ஊழலை பற்றி மோடி ஏன் பேச மறுக்கிறார்?”என கர்நாடக முதல் வர் சித்தராமையா கேள்விஎழுப்பியுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் எக்ஸ்  பக்கத்தில் அவர் மேலும்கூறுகையில், கர்நாடக அரசு மீது நாள்தோறும் பிரத மர் மோடிஉள்ளிட்ட பாஜகவினர் ஆதார மில்லாமல் போலியான குற்றச்சாட்டு களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா ஆணையம் முந்தைய கர்நாடக பாஜக அரசு கொரோனா காலத் தில் ரூ.330க்கு கிடைக்கும் பிபிஇ கிட்டை ரூ.2,140க்கு வாங்கியுள்ளதாக ஆதாரத் துடன் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொ டர்பாக பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கி றார்? இதற்கு அவர் என்ன சொல்லப்போகி றார்?” என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

‘குழந்தைகளின் கனவுகள்  ஈடேறத் துணை நிற்போம்!’  முதல்வர் வாழ்த்து!

சென்னை, நவ. 14 - முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான ‘நவம்பர் 14’  குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர் களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை! நமது கனவுகளைக் குழந்தை கள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் நாள் வாழ்த்தாகத் தெரிவிப்போம்! நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!’ என்று பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறுப் பேச்சு: நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன்  மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை,நவ.14- தெலுங்கு மக்கள் குறித்து அவதூறுப் பேச்சு வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், “ மனுதாரரின் இந்த பேச்சு தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமான வகையில் பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடிய வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் பேச்சு வெறுப்புப் பேச்சாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், அது வெடிகுண்டு போல உள்ளது. மனுதாரரின் கருத்து தெலுங்கு பேசும் மக்களின் உணர்வை மிகவும் புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற கேவலமான மற்றும் தரக்குறைவான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் இது மாதிரியான வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும். சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்கனவே வில்லில் இருந்து  வெளியேறிய அம்பு போன்றவை. அது தனது இலக்கை அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், அரை மனதுடன் கோரப்படும் மன்னிப்பு ஏற்கனவே நடந்த சேதத்தை சரிசெய்து விடாது என்று கூறி, கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்தார். 

தங்கம் விலை 4-வது நாளாக சரிவு!

சென்னை, நவ. 14 - சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக வியாழக்கிழமையும் சரிந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு படிப்படியாக குறைந்து வருகின்றது. கடந்த வாரத்தில் ரூ. 58 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத் தொடக்கம் முதல் சரிந்து வருகின்றது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 1,080-ம்,  புதன்கிழமை ரூ. 320-ம் குறைந்து ரூ. 56,360-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் பவுனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55 ஆயிரத்து 480-க்கும், ஒரு கிராம் ரூ. 6 ஆயிரத்து 935-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 2 ஆயிரத்து 720 குறைந்துள்ளது.

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,நவ.14- தமிழகத்தில் இன்று  7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தமிழகத்தில் நவம்பர் 15 அன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ.14-  தேர்தல்களின் போது வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், உணவுப் பொட்டல கழிவுகள், காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை. பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துகின்றனர் என்று கூறி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணையில், தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப்  பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்று  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

சென்னை,நவ.14-  மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் வியாழனன்று (நவ.14)  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று முழக்கமிட்டனர்.   மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரித்தல், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.   திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பாகவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பணி புறக்கணிப்பு நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.மேலும் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய  மருத்துவர்கள் சங்கம் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பள்ளி வளர்ச்சிக்காக ரூ.2467 கோடி செலவிடல்: அமைச்சர் தகவல்

சென்னை,நவ.14- சென்னை  கொளத்தூரில் உள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் மாநகராட்சி பள்ளி களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வியாழனன்று ஆய்வு செய்த னர்.  பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களிடம் கூறுகையில்,  77 வகைகளில் பள்ளிகளில் ஆய்வுசெய்யும் பொருட்டு 2  ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஆய்வு 234வது தொகுதியாக முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் நிறை வடைந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ஐந்தாண்டுகளில் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடை பெற்று வருகிறது. இதுவரை 2467 கோடி ரூபாய் பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப் பட்டுள்ளது. மாணவர்கள் அதி கம் அரசு பள்ளிகளில் சேர்வ தால் அதற்கு தேவையான கட்ட மைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித் துறைக்கு தனி யாக பட்ஜெட் போடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வரு கிறது என்று கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை விளக்கம்

சென்னை,நவ.14- சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்றும்   இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடிமரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னர் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்கக் கூடாது என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை மறுத்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும் கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.அறநிலையத்துறை தரப்பின் இந்த வாதம் குறித்து ஆணையர் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.