ஒன்றிய அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்!
சென்னை, நவ. 14 - ஒன்றிய பாஜக அரசானது, வாடகைக் கடைகளுக்கும் 18 சத விகிதம் ஜிஎஸ்டி வரி விதித்தி ருப்பது, சிறு வணிகர்கள் மீது தொடுக் கப்பட்ட கொடூரத் தாக்குதல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை விடுத் துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சலு கைகளை வாரி வழங்குவதையும், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர் களுக்கு விரோத மான நடவடிக்கைகளை அம லாக்குவதையும் வாடிக் கையாகக் கொண்டுள் ளது. சிறுவணிகர்களுக்கு 18% வரி இதன் ஒரு பகுதி யாக, வாடகைக் கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் இனி ஒவ் வொரு மாதமும் கடை வாடகை தொகையில் 18 சதவிகிதத்தை ஜி.எஸ்.டி. வரியாகச் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-இல் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள் ளது. ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோச மான தாக்குதலாகும். ஏற்கெனவே கடுமையாக பொரு ளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளி விடுகிற ஆபத்தைக் கொண்டதாகும். கார்ப்பரேட் வரியோ 8% குறைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உட னடியாக திரும்பப் பெற வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.