states

img

ஜார்க்கண்ட் வாக்குச்சாவடிகளில் பாஜக முறைகேடு

ராஞ்சி 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாக சட்டமன்ற தேர் தல் நடைபெற்று வருகிறது. முதற் கட்டமாக 43 தொகுதிகளுக்கு புத னன்று வாக்குப் பதிவு நடை பெற்றது.  இந்நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 43 தொகுதிகளின் பெரும்பாலான இடங்களில் பாஜக குண்டர்கள் முறைகேடுகளை நிகழ்த்தியதாக புகார் எழுந்துள்ளது. காங்கே சட்ட மன்ற தொகுதியின் 396ஆவது வாக்குச்சாவடியில் பாஜக முகவர் ஒருவர் பிரதமர் மோடி, தாமரை  சின்னம் மற்றும் காவி நிறத்திலான பையுடன் (கவர் பை) டோக்கன்  போல ஏதோ ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து வந்தார். இதனை கண்ட றிந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் புகார் அளிக்க, பாஜக முகவரை தேர்தல் அதிகாரிகள் வெளியேற்றினர்.  பாஜகவின் இந்த முறைகேடு தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. காங்கே சட்ட மன்றத் தொகுதி போல மேலும் பல தொகுதிகளில் பாஜகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் அட்டூழியம்

ஜார்க்கண்ட் தேர்த லோடு மேற்கு வங்க மாநிலத்தின் 6  சட்டமன்ற தொகுதிகளுக்கு புத னன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் நைஹாட்டி சட்டமன்றத் தொகுதி வாக்குப் பதிவின் பொழுது, பத்பாராவில் மர்ம நபர்கள் 3 பேர் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் பிரி வின் நிர்வாகியான அசோக்  ஷாவை சுட்டுக் கொன்றனர். அசோக் ஷாவின் படுகொலை க்கு பாஜகவினர் தான் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

தேர்தல் அதிகாரி மீது தாக்குதல் :  ராஜஸ்தானில் வன்முறை

ராஜஸ்தான் மாநிலத்தின் 7 சட்டமன்ற தொகுதி களுக்கு புதனன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தியோலி யூனியாரா தொகு தியில் சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா, தேர்தல் அதிகாரி கள் மீது தாக்குதல் நடத்தி யுள்ளார்.  இந்நிலையில், நரேஷ் மீனா வை போலீசார் வியாழனன்று கைது செய்தனர். ராஜஸ்தான் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டி யிட்ட பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் பாஜகவைச் சேர்ந் தவர்கள் ஆவர். “இந்தியா” கூட் டணி வாக்குகளை பிரிக்கவே  பாஜக தங்கள் கட்சி வேட்பாளர்க ளை சுயேச்சைகளாக  கள மிறக்கியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் அதி காரிகள் மீது தாக்குதல் நடத்திய நரேஷ் மீனாவும் காங்கிரஸ் கட்சி யில் இருந்து வெளியேறி பாஜக ஆதரவுடன் போட்டியிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக புதனன்று இரவு தொகுதி முழுவதும் வன்முறை யில் ஈடுபட்ட நரேஷ் மீனாவின் ஆதரவாளர்கள் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி கலைத்தனர். இந்த வன்முறை தொ டர்பாக 60 பேர் கைது செய்யப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.