states

img

மகாராஷ்டிராவில் சிபிஎம் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

மும்பை 288 தொகுதிகளைக் கொ ண்ட மகாராஷ்டி ராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2 தொகுதியில் (தஹானு (பழங்குடி), கல்வான் (பழங்குடி) மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணியுடனும், ஒரு தொகுதியில் (சோலாப்பூர் சிட்டி மத்தியத் தொகுதி) தனித்தும் போட்டியிடுகிறது. தஹானு (பழங்குடி) இந்நிலையில், பால்கர் மாவட் டத்தில் உள்ள தஹானு (பழங்குடி) தொகுதியின் சிபிஎம் வேட்பாள ரான வினோத் நிகோலுக்கு ஆதர வாக தலசாரி தாலுகாவில் உள்ள வாசா மற்றும் தஹானு தாலுகாவில் உள்ள வாக்கி ஆகிய இடங்களில் புதனன்று பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், அசோக் தாவ்லே, மத்தியக் குழு உறுப்பினர் மரியம்  தாவ்லே,  மாநில, மாவட்டக்குழு உறுப்பினர் கள் மற்றும்  ஊழியர்கள் பங்கேற்ற னர். அதே போல சிவசேனா (உத்தவ்),  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  (சரத்), கஷ்டகாரி சங்கதனா உள்ளிட்ட எம்விஏ கூட்டணிக் கட்சிகளின் தலை வர்கள், ஊழியர்களும் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

லகானு கோமுடன் பிருந்தா காரத் சந்திப்பு

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையே சிபிஎம் முது பெரும் தலைவரும், அகில இந்திய விவசாய சங்கத் தின் மூத்த தலைவருமான லகானு கோமை (88) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், அசோக் தாவ்லே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரிதனர். 1959 முதல் 66 ஆண்டுகளாக சிபிஎம் கட்சியில் பணியாற்றி வரும் லகானு கோம், ஆதிவாசி கிளர்ச்சி  இயக்கத்தின் புகழ்பெற்ற தலை வர்களான சாம்ராவ் பருலேகர் மற்றும் கோதாவரி பருலேகருடன் இணைந்து பணியாற்றியவர். நீண்ட காலமாக சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினராகவும், விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.  குறிப்பாக 1977இல் நடை பெற்ற நெருக்கடி நிலைக்குப் பிந்தைய தேர்தலில் லகானு கோம் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதே போல 1980, 1985, 1990 ஆகிய ஆண்டுகளில் ஜவ்ஹார் (பழங்குடி) தொகுதியில் (தற்போ தைய தஹானு (பழங்குடி) தொ குதி) தொடர்ந்து மூன்று முறை மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெ டுக்கப்பட்டார்.  இந்த சந்திப்பின் பொழுது லகானு கோமின் மனைவி ஹேம லதா கோமும் உடன் இருந்தார். லகானு கோமை போலவே ஹேம லதா கோமும் துடிப்பு மிக்கத் தலை வர் ஆவார். சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினராகவும், தானே-பால்கர்  மாவட்டங்களில் மாதர் சங்க நிறுவ னர்களில் ஒருவராகவும், தலசாரி தாலுகா பஞ்சாயத்தின்  தலைவரா கவும் பணியாற்றியவர். மண்டல் கல்வி நிறுவனங்கள்... அதன்பிறகு பிருந்தா காரத் தல சாரியில் உள்ள தோழர் கோதாவரி  சாம்ராவ் பருலேகர் கல்லூரியை யும் பார்வையிட்டார். இந்தக் கல் லூரியை ஆதிவாசி பிரகதி மண்டல் நடத்தி வருகிறது. இதனை 1960 களில் பருலேகர்கள் தொடங்கி னர். தொடர்ந்து லகானு கோம் மேம் படுத்தினார். மண்டல் பல பள்ளி கள், விடுதிகள், மூன்று இளநிலை  கல்லூரிகள் மற்றும் தலசாரி, தஹானு தாலுகாக்களில் கலை,  அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் ஒரு முதுநிலை கல்லூரி யை நடத்தி வருகிறது. இந்த அனை த்து கல்வி நிறுவனங்களிலும் மொத்தம் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடி  பெண்களும் பிரச்சாரம்

தஹானு தொகுதி முழுவதும் ஆங்காங்கே சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோ லுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், தஹானு தாலுகாவின் ஆஷகாட்டில் பழங் குடி பெண்கள் சார்பில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மத்தியக் குழு உறுப்பின ரும், மாதர்சங்க பொதுச் செய லாளருமான மரியம் தாவ்லே இந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.