பாஜக ஜனநாயகத்தை திருடுகிறது; எம்.பி., எம்எல்ஏக்களையும் திருடுகிறது. பாஜக திருடர் கட்சி ஆகும். பாஜகவினர் பழங்குடியினருக்கு எதிராக சதி செய்கிறார்கள். அதனால் தான் ஜார்க்கண்டில் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டால் பாஜக அரசு அவர்கள் மீது பூ மழை பொழிகிறது. ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு பற்றி பேசினால் பாஜக அரசு காவல்துறையைக் கொண்டு இளைஞர்களை அடக்கி ஒடுக்குகிறது.
வளர்ச்சி தொடர்பான பணிகளில் பாஜகவின் சிந்தனை குறைவாகவும் குறுகியதாகவும் உள்ளது. அவர்களது வரையறுக்கப்பட்ட சிந்தனையில் அரசியலைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. உடல்நலம் போன்ற தீவிரமான பிரச்சனையில் பாஜகவினரிடம் தொலைநோக்குப் பார்வையை எதிர்பார்ப்பது வீண்.
அமெரிக்காவில் குடியேற அனுமதி கேட்கும் இந்தியர்களின் அளவு, கடந்த மூன்று வருடங்களில் 855 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அவர்களில் பாதியளவு குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாடலின் லட்சணம் இதுதான்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் காரணமாக, விமானம்சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அவசர அவசரமாக தரை யிறக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தின் பதற்றமானதாக அறி விக்கப்பட்ட 6 பகுதிகளில் பாதுகாப்பு படையி னரின் செயல்பாட்டு வசதிக்காக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
“உணவு பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி, கிராமப்புற மக்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளது. இதெல்லாம் மோடியின் வெற்று முழக்கம் மற்றும் மோசமான கொள்கைகளின் விளை வுகள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
புல்டோசர் கலாச்சாரத்திற்கு எதிராக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை அந்த வழக்கை தொடர்ந்த ஜமியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் இருந்து தனக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாக சிவ சேனாவின் ஹரியானா பொறுப்பாளர் விக்ரம் சிங் சைபர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.