இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுக் களவாணி யான அதானி குழுமம் மற்றொரு படி முன்னேறி யுள்ளது. தற்போது 5 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்திய நாட்டின் ஒட்டு மொத்த உலோகத் துறை யையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே விமான நிலையங்கள், துறை முகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறை களில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நுழைவு வெறும் வணிக விரிவாக்கம் மட்டுமல்ல. இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஓரி ரண்டு பெரும் கார்ப்பரேட் குழுமங்களின் பிடியை இறுக்குவதாகவே அமைகிறது. வேதாந்தா, ஹிண் டால்கோ போன்ற பெரும் உலோக நிறுவனங்களு டன் போட்டியிட அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, அதானி குழுமத்தின் இந்த முதலீடு அவர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கானது என்பதே கவலைக்குரியது. மின்சக்தி உற்பத்தி, போக்குவரத்து போன்ற தங்களது ஏனைய வணி கங்களுக்கு இந்த உலோகங்களைப் பயன் படுத்த திட்டமிட்டுள்ளனர். இது முழு உற்பத்தி சங்கிலியையும் ஒரே குழுமத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியாகும்.
பசுமை ஆற்றல் என்ற பெயரில் சோலார் பேனல்கள், காற்றாலை டர்பைன்கள் தயாரிப்பி லும் இந்த உலோகங்கள் பயன்படுத்தப்படும் என்கி றார்கள். ஆனால் இது வெறும் சுற்றுச்சூழல் கார ணங்களுக்காக மட்டுமல்ல, மாறாக முழு ஆற்றல் துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியே.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் தாமிரத் தேவை இரட்டிப்பாகும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படு கிறது. வெளிநாட்டு இறக்குமதியைக் குறைப்பது என்ற பெயரில், உள்நாட்டு உற்பத்தியை ஒரு சில பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பது கேள்விக்குறியே.
இந்தியப் பொருளாதாரத்தின் பன்முகத் தன்மையும், போட்டித்தன்மையும் படிப்படியாக சிதைக்கப்படுவதை இது காட்டுகிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இத்தகைய சில பெரும் கார்ப்பரேட் குழுமங்க ளின் ஆதிக்கம் பெரும் சவாலாக அமையும். சில ஆண்டுகளில், உலோகத்துறை சார்ந்த நிறுவனங் கள் அனைத்தையும் அதானி குழுமம் விழுங்கும். ஏற்கெனவே பல துறைகளில் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.
இது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொ ருளாதார ஜனநாயகத்துக்கே ஆபத்தை விளை விக்கக்கூடும். அந்த ஆபத்தை முன்னின்று நிறை வேற்றுகிறது அதானியால் ஆதாயம் பார்க்கும் பாஜகவின் மோடி அரசு.