headlines

img

கேள்விக்குறியாகும்  ரயில் பயணிகள் சேவை

 தெற்கு ரயில்வே சந்தித்துவரும் கடுமையான நிதி நெருக்கடியால் பயணிகளுக்கான சேவை கேள்விக்குறியாகி வருகிறது.இதனால் தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது பல சேவைகளை நிறுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. இத னால் பயணிகளின் கடுமையான கோபத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். நெருக்கடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு உரிய நேரத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் அங்கி ருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.  நிதி இல்லாத காரணத்தால் தெற்கு ரயில்வே 110 ரயில்களில், அனைத்து சேவைப் பணிகளையும் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று அதி காரிகள் தெரிவிக்கிறார்கள். குளிர்பதன பெட்டிக ளில் வழங்கப்படும் போர்வைகள், துண்டுகள் சல வைக்கு அனுப்புவது நிறுத்தப்படும். ரயில்களில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள் ளும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நிதி விடுவிக்கப் படாததால் அவர்கள் தங்களது பணிகளை நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் மோதிக் கொள்ளும் மிக மோசமான நிலையை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்திவருகிறது. ஓடும் ரயில்களில் உள்ள கழிப்பறைகள் சுத்த மாக பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார் ஏற்கெ னவே பயணிகள் மத்தியில் உண்டு. தற்போது அந்த அரைகுறையான பணிகளும் நிறுத்தப் பட்டால் மிகமோசமான சுகாதார சீர்கேடு ஏற்படும். நாட்டின் மிகப்பெரிய பொதுப் போக்கு வரத்து சேவைத்துறையாக ரயில்வே உள்ளது.எனவே பயணிகளின் நலன்களோடு ரயில்வே ஒரு போதும் விளையாடக்கூடாது.  நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவுபோக மீதமுள்ளதொகை இம்மாத இறுதி வரை மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாம். எனவே நிதி நெருக்கடி யிலிருந்து விடுபட தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ரயில்வே அமைச்சகத்திடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள் ளார். ஒப்பந்தாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குறிப்பாக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையான 22 கோடி ரூபாயும், ஹவுஸ்கீப்பிங் சேவையை வழங்கு வதற்கு 130 கோடி ரூபாயும் வழங்கினால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். சுகா தாரத்தோடு தொடர்புடைய இந்த பணிகளில் எக்காரணத்தைக் கொண்டும் சமசரம் செய்து கொள்ளக்கூடாது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி தனியார் மயம் தான் ஒரே தீர்வு என்று மத்திய அரசு கருது மேயானால் பயணிகளுக்கான சேவை தடம் புரளவே செய்யும். ஏற்கனவே ரயில்வே உணவகங் கள் தனியாரிடம் தரப்பட்டது. ஆனால் சேவை மேம்படவில்லை. தற்போது ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதும் தனியாரிடம்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளது. நிலைமையில் முன்னேற்றம் இல்லை. எனவே தனியார்மயத்தால் நிலைமை மோசமடை யுமே தவிர மேம்படாது. இதுதான் பல நாடுகளில் கிடைத்த அனுபவம்.