மணிப்பூர் மாநில உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அந்த மாநில மக்களு க்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் பக்கம் கூட எட்டிப் பார்க்காதவர் இவர். அந்த மாநில மக்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் மாநில மக்களின் கடந்த கால பங்களிப்பு மகத்தானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அந்த மாநிலத்தில் நிலவி வரும் வன் முறையை தடுத்து நிறுத்த இரட்டை என்ஜின் அர சான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசும், மாநில அரசும் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து பிரதமர் ஒரு வார்த்தையாவது சொல்ல முடியுமா?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில் அங்கு அமைதி நிலவ பிரார்த்தனை செய்கிறேன் என்பதோடு முடித்துக் கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சர் என்கிற முறையில் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடி பொறுப்பு இவர்தான்.ஆனால் அந்த மாநில மக்க ளின் வாழ்வில் அமைதி திரும்புவதற்கு எந்த வொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் இவர் தன்னால் முடிந்தது பிரார்த்தனை செய்வது மட்டும்தான் என்று கூறி நழுவுகிறார்.
1824இல் கிழக்கிந்திய கம்பெனி வகுத்த திட் டத்தை ஏற்றுக் கொண்டு மணிப்பூரில் ஆட்சி செய்த மன்னர்கள் ஆண்டுதோறும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் செலுத்தி வந்தனர். 1949ஆம் ஆண்டு இந்தியாவுடன் மணிப்பூர் இணைக்கப் பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றிய பகுதியாக இருந்த மணிப்பூர் 1972இல் தனி மாநில தகுதி பெற் றது. அந்த மாநில மக்களால் பேசப்படும் மணிப்பூரி மொழி அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்ட வணையில் இடம் பெற்றுள்ளது. மணிப்பூர் மக்க ளின் நடனமும் தனித்துவம் வாய்ந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் படைகளின் களமாக மணிப்பூர் மாற்றப்பட்டது. தற்போது ஒன்றிய பாஜக ஆட்சிக் காலத்தில் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சி கார ணமாக மீண்டும் மணிப்பூர் வன்முறைக் களமாக மாற்றப்பட்டுள்ளது. இதே நாளில்தான் திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களும் உதயமாகின. இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி யிலும், மக்கள் ஒற்றுமையிலும் உயர்ந்தோங்கி நின்ற திரிபுரா மாநிலம் தற்போது பாஜக ஆட்சி யில் அனைத்து வகையிலும் பின்தங்கியுள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவு மக்களிடையே கலவ ரத்தைத் தூண்டி குளிர் காய முயன்ற பாஜக - ஆர் எஸ்எஸ் பரிவாரம் தற்போது அந்த நெருப்பை அணைக்க முடியாமல் திணறுகிறது. இதனால் வாழ்விழந்து நிற்பது மணிப்பூர் மக்களே ஆகும். அங்கு ஒற்றுமையும், அமைதியும் திரும்ப வேண்டும் என்பதே இந்திய மக்கள் அனைவரது விருப்பமும் ஆகும்.