headlines

img

அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் டிரம்ப்பின் அராஜகமும்

அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் டிரம்ப்பின் அராஜகமும்

ஜனாதிபதி டிரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்புகள் தொடர்பாக, அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, டொனால்டு டிரம்பின் சர்வாதிகாரப் போக்கிற்கு விழுந்த பலத்த அடி யாகும். 1977-ஆம் ஆண்டின் ‘சர்வதேச அவசர கால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை’ (IEEPA) தவறாகப் பயன்படுத்தி, உலக நாடுகள்  மீது டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs) சட்டவிரோதமானவை என்றும், ஜனாதிபதி தனது அதிகார வரம்பை  மீறிவிட்டார் என்றும் நீதிமன்றம் திட்டவட்ட மாகத் தீர்ப்பளித்துள்ளது. 

ஆனால், இந்தத் தீர்ப்பை மதிக்காத டொ னால்டு டிரம்ப், தீர்ப்பு வந்த சில மணி நேரங்களி லேயே 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் ‘பிரிவு 122’-ஐப் பயன்படுத்தி, அனைத்து இறக்கு மதிப் பொருட்களுக்கும் 15% வரை கூடுதல் வரி  விதித்து தனது அராஜகத்தைத் தொடர்ந்துள்ளார்.  அமெரிக்காவின் இந்தச் சட்டவிரோத நடவடிக் கைகளால் உலக வர்த்தகச் சூழலே போர்க்கள மாக மாறியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில், பிப்ரவரி 23 அன்று நடைபெறவிருந்த இந்தியக் குழுவின் சந்திப்பு மட்டும் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த  சந்திப்பு ஒத்திவைப்பு என்பது வெறும் கண்து டைப்பே அன்றி, இந்தியாவின் நலன்களுக்கான  உறுதியான முடிவு அல்ல. 

உண்மையில், பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப் பட்ட கூட்டு அறிக்கையின்படி உருவான ‘இடைக் கால வர்த்தக ஒப்பந்தம்’ என்பது இந்தியாவின்  இறையாண்மைக்கு எதிரானது. ரஷ்யாவிட மிருந்து எண்ணெய் வாங்குவதற்கான இந்தியா வின் உரிமையைப் பறிப்பதும், இந்தியாவின் விவ சாயத் துறையை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங் களுக்குத் திறந்து விடுவதும் இந்த ஒப்பந்தத் தின் நோக்கங்கள். மோடி அரசு இந்த ஒப்பந்தத் தின் மூலம் இந்தியாவின் பொருளாதார உரிமை

ளை அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளது.  அமெரிக்க உச்ச நீதிமன்றமே டிரம்ப்பின் வரிக்  கொள்கை செல்லாது என்று சொன்ன பிறகும், புதிய வரி விதிப்புகளைத் தன்னிச்சையாகத் திணிக்கும் வாஷிங்டன் நிர்வாகத்துடன் தொ டர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தற்கொலைக்குச் சமம். இது இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் சுதந்திரத்தை முடக்கும் ஒரு சூழ்ச்சி. அமெரிக்க வர்த்தகப் பிரதி நிதி ஜேமிசன் கிரீர், இந்தியாவின் ஏற்றுமதி களுக்கு எதிராக ‘பிரிவு 301’ விசாரணைகளைத் தொடங்குவோம் என மிரட்டுவது, வளரும் நாடு களை அடிபணிய வைக்கும் தந்திரமாகும். 

எனவே, வெறுமனே சந்திப்புகளை ஒத்தி வைக்காமல், இந்தியாவின் சுயசார்பு பொரு ளாதாரத்தைப் பாதுகாக்கும் முதன்மை முக்கியத் துவம் வாய்ந்த முடிவாக, இந்த அடிமைத்தன மான ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா முழுமையாக விலக வேண்டும். மக்கள் நலனைப் புறக்கணித்து வாஷிங்டன் கார்ப்பரேட் நலன்களுக்காக அமெரிக்காவிடம் சரணடையும்  மோடி அரசின் போக்கை முறியடிக்க வேண்டியது  காலத்தின் கட்டாயம்.