games

img

மீண்டும் செரீனா வில்லியம்ஸ்? - சான் பிரான்சிஸ்கோ

கடந்த மாதம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரோடு ஓய்வு அறிவித்த செரீனா வில்லியம்ஸ் மீண்டும் டென்னிஸ் உலகிற்கு திரும்ப  உள்ளது போன்று ஒரு மாறுபட்ட தகவலை அளித்துள்ளார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்  கோ நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது  செரீனாவில்லி யம்ஸ் கூறியதாவது,​​“நான் மீண்டும் ஓய்வு பெறவில்லை. நான்திரும்புவதற் கான வாய்ப்புகள் மிக அதிகம்.டென்னிஸ் மைதானம் உள்ளது, நீங்கள்  என் வீட்டிற்கு வரலாம். என் வாழ்க்கை யில் முதல்முறையாக எந்த போட்டி யிலும் விளையாடாமல்இருக்கிறேன். இது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது. ஆனால் நான் இப்போது வரை ஓய்வு பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதை உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்” என கூறியுள்ளார்.  இது ஒரு குளறுபடி பேட்டி. சர்வதேச டென்னிஸ் உலகில் மீண்டும் களமிறங்க போவதாக செரீனா வில்லி யம்ஸ் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை.   ஆனால் அவரது பேச்சு ஓய்வை வாபஸ் பெறுவதை போன்று திடமாக குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.