games

img

விளையாட்டு

6-0, 6-0 டென்னிஸ் உலகில் 37 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைத்த ஸ்வியாடெக்

138ஆவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அனிஸ்மோவா மோதினர்.  தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றினார். குறிப்பாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டி வரலாற்றில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வியாடெக் எதிரணி வீராங்கனையை ஒரு கேம் (செட் புள்ளிகள்) கூட எடுக்கவிடாமல் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 1988ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை நடாஷாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொதப்பலால் ஸ்வியாடெக் வெற்றி?

சொதப்பலால் ஸ்வியாடெக் வெற்றி? கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில், முதல் முறையாக அமெரிக்காவின் அனிஸ்மோவா விம்பிள்டன் மூலம் இறுதிக்கு முன்னேறினார். ஸ்வியாடெக் வழக்கம் போல அதிரடியாக விளையாடினாலும், அதிகம் பதற்றத்துடன் காணப்பட்ட அனிஸ்மோவா திணறலாக விளையாடினார். குறிப்பாக தவறான சாட்களை அதிகம் விளாசினார். ஸ்வியாடெக்கின் அதிரடி வெற்றிக்கு அனிஸ்மோவாவின் சொதப்பல் தான் முதன்மையான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையில்லாத மோதல் : சப்மன் கில்லுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை அன்று நடை பெற்ற மூன்றாவது நாளின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை இங்கிலாந்து தொடங்கி யது.  அந்நாட்டின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை செலவிட்டார் எனக் கூறப்படுகிறது. அதாவது பும்ரா வீசிய 5ஆவது பந்தில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லிக்கு கையுறையின் மீது பந்து பட்டது. இதனால் அணியின் மருத்து வரை அழைத்தார் ஜாக் கிராவ்லி. இதனைப் பார்த்துக் கொண்டி ருந்த இந்திய அணியின் சப்மன் கில் ஆவேசம் அடைந்தார். கிண்டலாக கையைத் தட்டிகொண்டே ஜாக் கிராவ்லியை நோக்கி நடந்து எச்சரிக்கும் தொனியில் பேசினார். இரு வரும் ஆவேசமாகப் பேச வார்த்தை மோதல் ஏற்பட்டது. பின்னர் பென் டக்கெட் உடனும் கில் ஆவேசமாகப் பேசினார். இந்த நிகழ்வு இந்திய ரசி கர்களிடம் ஆதரவைப் பெற்றாலும், பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதே எதற்கு 3ஆவது நாளில் இங்கிலாந்து அணியுடன் இந்த மோதல். இது தேவையில்லாதது என இந்திய ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இந்திய அணியின் சப்மன் கில்லை விமர்சித்து வருகிறார்கள்.