games

img

விளையாட்டு

டென்னிஸ் உலகில் இரட்டையர் பிரிவை சீர்குலைக்க அமெரிக்கா திட்டம்

143 ஆண்டுகால பழமை யான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கு கிறது. இந்த தொடரில் முக்கிய மாற்றம் என்ற பெயரில் ஒற்றையர் சுற்றுகள் தொடங்கும் முன்பே, தகுதி சுற்று நடைபெறும் நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவு தொடங்கப்பட்டு, வியாழனன்று முடிக்கப்பட்டுவிட்டது.  கண்டனம் டென்னிஸ் உலகில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவில் வீரர் - வீராங்கனைகள் ஆதிக்கம் தனித் தனியாக உள்ளன. ஒரே  நாளில் இரண்டு வகையான ஆட்டங்கள் விளையாட வேண்டும் என்பதால் ஒரு பிரிவில் மட்டுமே வீரர் - வீராங்கனை கள் விளையாடுவார்கள். அப்படி சிறப்பு திறனுடன் விளையாடினாலும்  ஒற்றையர் பிரிவில் சாதிப்பவர்கள் இரட்டையர் பிரிவில் சோபிக்க மாட்டார்கள். இரண்டு பிரிவுகளிலும் சாதித்தால் அது அதிர்ஷ்டம் வர லாறாக தான் வெளிப்படும். நிலைமை இப்படி உள்ள நிலையில், புதிய முறை என்ற பெயரில் அமெரிக்க ஓபனில் முன்கூட்டியே கலப்பு இரட்டையர் போட்டியை நடத்தியுள்ளது இரட்டை யர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் வீரர் - வீராங்கனைகளை பெரிதாக பாதித்துள்ளது.  காரணம் ஒற்றையர் பிரிவில் விளையாடும் ஆளுமைகள் பயிற்சிக்காக அமெரிக்க ஓபனின் கலப்பு இரட்டையர் பிரிக் களமிறங்கி, அப்பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் இரட்டையர் பிரிவு ஆளுமைகளை புரட்டியெடுத்துள்ளனர். இதில் சோக மான விசயம் என்னவென்றால் இரட்டை யர் பிரிவில் பிரம்மாண்டமாக ஆதிக்கம் செலுத்தும் வீரர் - வீராங்கனைகள் (சாம்பி யன் பட்டம் வென்றவர்களை தவிர)  நடப்பு சீசன் அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு கூட தகுதி பெற வில்லை. ஒற்றையர் பிரிவில் நன்றாக விளையாடும் வீரர் - வீராங்கனைகளே அரையிறுதிக்கு அதிகம் தகுதி பெற்றனர். இது டென்னிஸ் உல கில் இரட்டையர் பிரிவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் அமெரி க்க டென்னிஸ் சம்மேளனத்திற்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மகளிர் உலகக்கோப்பை பெங்களூரில் நடைபெறும் ஆட்டங்கள் நவி மும்பைக்கு மாற்றம்

13ஆவது சீசன் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெறும் இந்த உலகக்கோப்பையின் தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் என 5 போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன் மாதம் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் பிரச்சனையால் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற முடியவில்லை என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்தது. இதனையடுத்து பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை முடிவில் பெங்களூரில் நடைபெறும் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.