games

img

2022 டி20 உலகக்கோப்பை; அணிகளின் அட்டவணை வெளியீடு  

2022 டி20 உலகக்கோப்கைக்கான அணிகளின் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.  

2022 ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் இறுதி போட்டி நவம்பர் 13 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.  

மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 இடங்களில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.    

இந்த போட்டியில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.  

சூப்பர் 12 சுற்றில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை, மேற்குவங்கம், நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி சுற்றில் பங்கேற்க உள்ளன. 

;