games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

அரையிறுதி ஆட்டங்கள்

முதலாவது அரையிறுதி
நியூசிலாந்து - பாகிஸ்தான்
நாள் : நவ., 9-ஆம் தேதி
நேரம் : மதியம் 1:30 
இடம் : சிட்னி

முதலாவது அரையிறுதி
நியூசிலாந்து - பாகிஸ்தான்
நாள் : நவ., 9-ஆம் தேதி
நேரம் : மதியம் 1:30 
இடம் : சிட்னி

நவம்பர் 13-ஆம் தேதி (ஞாயிறு)
நேரம் : மதியம் 1:30 
இடம் : மெல்போர்ன்

9-வது சீசன் டி-20 உலகக்கோப்பை
தகுதி சுற்றில் இருந்து நேரடியாக தகுதிப்பெற்ற நெதர்லாந்து

தற்போது 8-வது சீசன் டி-20 தொடர் இறுதிக்கட்ட த்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, இங்கி லாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் அரை யிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. புதனன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கும் நிலையில், அடுத்த சீசன் (9-வது) உலகக்கோப்பை தொடருக்கான நேரடியாக தகுதி பெற்ற அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூப்பர் 12 சுற்றில் உள்ள இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த 8 அணிகள் அடுத்த உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.  “குரூப் 1” - நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை “குரூப் 2” - இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து இதுபோக போட்டியை நடத்தும் மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்காவும், ஐசிசி தரவரிசையில் டாப் ஆர்டரில் உள்ள வங்கதேசமும், ஆப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடப்பு சீசன் உலகக்கோப்பையில் தகுதி சுற்று மூலம் “சூப்பர் 12” சுற்றுக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து அணி  அடுத்த உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றி ருப்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடுத்த உலகக்கோப்பைக்கு 12 அணிகள் நேரடி யாகத் தேர்வாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 8 அணி களும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. 9-வது சீசன் டி-20 உலகக்கோப்பை 2024- ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.