games

img

ஆஷஸ் முதல் டெஸ்ட் – இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் 8 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது.

 அதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்களிலும்,  ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். டேவிட் மலன் 82 ரன்களும், கேப்டன் ரூட் 89 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாததால் இங்கிலாந்து அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 19 ரன்கள் முன்னிலை பெற்றது.  இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 5.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 16 ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.