ஆசியக் கோப்பை கிரிக்கெட் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரீட்சை
17ஆவது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் (டி-20) ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி “ஏ” பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், “பி” பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்று முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி
அடுத்தாண்டு (2026 - ஜூன், ஜூலை) அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடு களில் கூட்டாக 23ஆவது சீசன் உல கக்கோப்பை கால்பந்து தொடர் நடை பெறுகிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் பங் கேற்கும் நாடுகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், 18ஆவது நாடாக உலகக்கோப்பை கால்பந்து போட்டி க்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பி ரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் துனிசியா - எக்கு வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் (எக்குவடோரியல் கினியா நாட்டின் தலைநகர்) நடை பெற்ற இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் “எச்” பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்த துனிசியா உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. துனிசியா 7ஆவது முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலகக்கோப்பையில் விளை யாடி இருந்தது. மேலும் உல கக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2ஆவது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். முதல் அணியாக மொராக்கோ தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி லீக் : இன்றைய ஆட்டங்கள்
மும்பை - தெலுங்கு டைட்டன்ஸ் நேரம் : இரவு 8 மணி
உ.பி., யோதாஸ் - புனே நேரம் : இரவு 9 மணி