games

img

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் பிரியா மாலிக்

ஹங்கேரி நாட்டின், புடோபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 73 கிலோ பிரிவில், இந்தியாவின் பிரியா மாலிக் மற்றும் பெலாரஸ் நாட்டின் செனியா பேட்டபோவிச் ஆகியோர் மோதினார். துவக்கம் முதலே பிரியா மாலிக் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் 5-0 என செனியாவை வீழ்த்திப் பிரியா மாலிக் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

ஹரியானாவில் பிறந்த இவர், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா தொடரில் தங்கம் வென்றார். பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் சிறுசிறு தொடர்களில் சிறப்பாக ஆடிய பிரியா மாலிக்கின் முதல் பெரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.