games

img

விளையாட்டு...

அடிலெய்டு டென்னிஸ் 2025  - கீஸ், பெலிக்ஸ் சாம்பியன்

5ஆவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர், ஆஸ்தி ரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெ ரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத சகநாட்டு வீராங்கனை   கீஸை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் இல்லாத வீராங்கனையாக இருந்தா லும் பெகுலாவை விட கீஸ் பலம் வாய்ந்த வீராங்கனை என்ற நிலையில், இறுதி ஆட்டத்தின் முடிவில் 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் கீஸ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பெலிக்ஸ் அசத்தல் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5ஆம் இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோட்ராவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடி யாக விளையாடிய பெலிக்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலி ஜோடிக்கு கோப்பை முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தர வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் ஆந்த்ரே - சிமோனே ஜோடி, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டிம் - கெவின் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப் படுத்திய ஆந்த்ரே - சிமோனே ஜோடி 4-6, 7-6 (7-4), 11-9 என்ற செட் கணக் கில் வெற்றி பெற்று கோப்பையை கைப் பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 -  வீரர்கள் பட்டியலை வெளியிட முடியாமல் திணறும் இந்தியா

மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் 9ஆவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரே லியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கா னிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின் றன. பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக இந்தியா விளையா டும் ஆட்டங்கள் மட்டும் அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணி வீரர்க ளின் பட்டியலை அறிவிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் ஆகும். இதனால் இந்திய அணி வீரர்களின் பட்டியல் சனிக் கிழமை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக  சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடருக்கு வலுவான அணியை களமிறக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் வீரர்கள் பட்டியல் தொடர்பான அறிவிப்பிற்கு ஒருவார காலம் அவகாசம் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 18 அல்லது 19ஆம் தேதி தேர்வு குழுவினர் கூடி  அணியை அறிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

42 நிமிடம் ; ரூ.882 கோடி சம்பளம்

42 நிமிடம் ; ரூ.882 கோடி சம்பளம்  2024ஆம் ஆண்டில் நெய்மருக்கு அடித்த ஜாக்பாட் கால்பந்து உலகின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒரு வரான, பிரேசில் கேப்டன் நெய்மர் 2024ஆம் ஆண்டில் வெறும் 42 நிமிடமே கால்பந்து விளையாடி ரூ.882 கோடி சம்ப ளத்தை அள்ளியுள் ளார். இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த் தியுள்ளது.  நெய்மர் சவூதி அரேபியா கிளப் கால்பந்து அணியான அல் ஹிலால் அணிக்காக விளை யாடி வருகிறார். 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் விளையாடி வரும் நெய்மர் ஆண்டுக்கு ரூ.882 கோடி (101 மில்லியன் யூரோ) சம்பளம் பெறுகிறார். அதன்படி 2024ஆம் ஆண்டில் வெறும் 42 நிமிடமே கால்பந்து விளையாடி ரூ.882 கோடி சம்பளத்தை அள்ளியுள்ளார் நெய்மர். காயம் காரணமாக 2024ஆம் ஆண்டில் 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெய்மர் அதில் 42 நிமிடம் மட்டுமே களத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.