games

img

விளையாட்டு...

சாம்பியன்ஸ் டிராபி 2025  - விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா நீக்கம்?

மினி உலகக்கோப்பை என அழைக்கப் படும் 9ஆவது சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறி விக்கப்படாமல் உள்ள நிலை யில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜாவை நீக்கி,  இளம் அணியுடன் சாம்பி யன்ஸ் டிராபியை எதிர்கொ ள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோ சித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜாவை நீக்கி அவர்களு க்கு பதிலாக இளம் வீரர்களை கண்டறியவே பிசிசிஐ இன் னும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான அணி வீரர் கள் விபரத்தை இன்னும் அறி விக்காமல் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. தற்போதைய சூழலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகிய மூவரும் மூத்த வீரர்கள் என்ற அடிப்படையில் இந்திய அணியின் தூண்க ளாக இருப்பவர்கள். ஆனால் ஒரே ஒரு தொடரில் ஏற்பட்ட சொ தப்பல்களால் உடனடியாக அணியில் நீக்குவது மிகவும் தவறானது. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா,  ஜடேஜா  மட்டும் சொதப்ப வில்லை. ஒட்டுமொத்த இந்திய அணியும் சொதப்பியது என் பதை பிசிசிஐ கவனத்தில் கொள்ளாதது மிகவும் மோச மானது. அதனால் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடே ஜாவை மட்டும் நீக்குவது சரி யானது அல்ல. குறிப்பாக பார்டர் - கவாஸ்கர் என்பது டெஸ்ட் தொடர் ஆகும். சாம்பி யன்ஸ் டிராபி ஒருநாள் கோப்பை ஆகும். இரண்டும் வெவ்வேறான தொடர் என்ற நிலையில், கம்பீர் மற்றும் பிசி சிஐ-யின் இந்த முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. மூவரும் சாதாரண ஆட்கள் இல்லை விராட் கோலி டெஸ்டில் 30 சதம், ஒருநாள் போட்டியில் 50 சதம் விளாசிய சாதனைக் குரியவர். மேலும் டெஸ்ட் போட்டியில் 9,230 ரன்களும், ஒருநாள் போட்டியில் 13,906 ரன்களும் குவித்த சிறப்புக்குரி யவர். அதே போல அதிரடி குணம் கொண்ட ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒருநாள் போட்டியில் 31 சதமும் விளாசி யவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 3 முறை  இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் வரலாற்றுச் சாதனையும் ரோகித் சர்மாவிடம் தான் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரிசமமாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முரட்டு குணம் கொண்ட ஜடேஜா  இதுவரை பார்ம் பிரச்சனை யில் சிக்கியதே இல்லை. டெஸ்ட் போட்டியில் 4 சதம் விளாசியுள்ள ஜடேஜா, ஒரு நாள் போட்டிகளிலன் இக் கட்டான சூழ்நிலையில், 13 முறை சதத்தை  நெருங்கும் வகையில் அரை சதம் விளா சியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 319 விக்கெட்டு களும், ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இத்தகைய சிறப்புகள் மற்றும் சாதனை களை உடைய விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜாவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நீக்கும் முடிவு மிக மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கம்பீரைத்தான் முதலில் நீக்க வேண்டும்

இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரில் சொதப்பியதற்கு வீரர்கள் மட்டுமின்றி புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீரும் முக்கிய காரணம் ஆகும். சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்காதது, வீரர்கள் தேர்வு, ஆடும் லெவன் தேர்வு, அடிக்கடி ஆடும் லெவன் மாற்றம் என பல்வேறு வகையில் வீரர்களுக்கு குடைச்சலை கொடுத்தார். கம்பீரின் அழுத்தம் மற்றும் தந்திரம் இல்லாத பயிற்சி காரணமாகவே வீரர்கள் பதற்றத்துடன் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சோபிக்க தவறிவிட்டனர். அணியில் சீர்திருத்தம் தேவை என்றால் முதலில் பாஜக முன்னாள் எம்.பி.,யான கம்பீரை தான் நீக்க வேண்டும்.

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால் கடந்த 2 மாத காலமாக பிசிசிஐ செயலாளர் பதவி காலியாக இருந்தது.இந்நிலையில், பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட் விளையாட்டில் குறுகிய அனுபவம் கொண்ட தேவஜித் சைக்கியா தேசிய அணியில் இடம் கிடைக்காததால் தனது 28 வயதில் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். சட்டம், நிர்வாகம் என ஓரளவு அனுபவ திறன் கொண்ட தேவஜித் சைக்கியா பாஜகவிற்கு நெருக்கமானவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.