சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் வீரர் - வீராங்கனைகளின் ஆணைய தலைவராக பி.வி.சிந்து நியமனம்
சர்வதேச பேட்மிண்டன் சம்மே ளனம் மலேசியா தலை நகர் கோலாலம்பூரில் உள்ளது. இந்த சம்மேளனத்தின் வீரர் - வீராங்கனை களின் விளையாட்டு ஆணைய பிரிவு தலைவராக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க நாயகியுமான பி.வி. சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். பி.வி.சிந்து 2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். மேலும் சர்வதேச பேட்மிண்டன் சம்மே ளனத்தின் உறுப்பினராகவும், வாக்கு ரிமை கொண்ட உறுப்பினராகவும் அவர் செயல்படுவார். டென்மார்க்கின் கேத்ரின் ரோசன் கிரென் துணைத் தலைவராகவும், அமி பர்னட் (அமெரிக்கா), கெயிலி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா) மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர். பி.வி. சிந்து 2017 முதல், சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் வீரர் - வீராங்கனைகளின் ஆணைய உறுப் பினராக பணியாற்றி வருகிறார். மேலும் 2020 முதல் சர்வதேச பேட் மிண்டன் இன்டெக்ரிட்டி (ஊழல், மோசடி மற்றும் தவறான செயல் களிலிருந்து பாதுகாப்பதற்காக) தூதராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பிரசித்திப் பெற்ற “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடை யிலான 2025-26 ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டி வெள்ளிக் கிழமை அன்று (டிச., 26) தொடங்கு கிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடை பெறும் இந்த போட்டி உலக பிரசித்தி பெற்ற “பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடைபெறும் போட்டிகள்)” ஆட்டமாக நடைபெறு கிறது. 5 போட்டிகள் கொண்ட நடப் பாண்டுக்கான ஆஷஸ் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்தி ரேலியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது. இதனால் அடுத்து நடைபெற உள்ள இரண்டு போட்டி களும் வெறும் சம்பிரதாயம் தான். எனினும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஒரு கவுரவ போட்டியாக இருப்பதாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காகவும் முக்கியமானதும் என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று பார்ம் தொடர் தோல்வி, மது அருந்திய பிரச்ச னை தீர்க்க இங்கிலாந்து அணி கள மிறங்குகிறது. அதே போல இங்கி லாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்குகிறது. இத னால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. மாற்றங்கள் ஆஸ்திரேலியா இந்த முறை சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல், முழு வதுமாக வேகப்பந்து வீச்சாளர் களைக் கொண்ட (All-pace attack) கூட்டணியுடன் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக லயன் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இந்தப் போட்டி யில் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். அதே போல இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜேக்கப் பெத்தேல் அறிமுகமாகி யுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சருக்குப் பதிலாக அட்கின்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆடுகளம் உலகின் மிகப்பெரிய மைதானங் களில் ஒன்றான மெல்போர்ன் (MCG) ஆடுகளம் தற்போது பனி மூட்டமான வானிலையுடன், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது.