games

img

விளையாட்டு

உள்ளூர் போட்டியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு 2 மடங்கு சம்பளம்

இந்தியாவில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி சம்பள மாக நாள் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50,000 பெறு வார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10,000  இருந்து ரூ.25,000 அதிகரிக்கப்பட உள்ளது. அதே போல உள்ளூர் டி-20 போட்டி களில் களம் காணும் சீனியர் வீராங் கனைகளுக்கு ஒரு போட்டிக்கு  ரூ.25,000, மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500 அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைகளுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. அவர் களுக்கு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரூ.25,000, டி-20 போட்டிக்கு ரூ.12,500 வழங்கப்பட உள்ளது. அதே போல நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40,000, அதுவே முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50,000 முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசியக்கோப்பை வெற்றி உலகக்கோப்பைக்கு நிகராக பரிசுகளை அள்ளி வீசும் பாகிஸ்தான் அரசு

12ஆவது சீசன் இளையோர்  ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்ப ட்டோர்) துபாயில் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்ட த்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  இந்நிலையில், ஆசியக்கோப்பை வெற்றியை அந்நாட்டு அரசும், ரசிகர் களும் உலகக்கோப்பை வெற்றித் திரு விழா போல் அவர்கள் கொண்டாடி வருகின்றனர். திங்களன்று அதிகாலை தாயகம் திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு, சீனியர் வீரர்களுக்கு கொடுப்பது போன்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக  இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், ஆசியக்கோப்பை வென்று கொடுத்த பாகிஸ்தான் இளம்  வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ.1  கோடி (இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் அவர்களை தனது இல்லத் திற்கு நேரில் அழைத்து விருந்தளிக்க வும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பாகிஸ்தான் வீரர்களுக்கு கோப்பை மற்றும் பதக்க ங்களை வழங்கி பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலை வரும், உள்துறை அமைச்சருமான மொசின் நவ்வி ஒவ்வொரு வீரர் களுக்கும் தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.