3-0 இங்கிலாந்து மீண்டும் படுதோல்வி ; ஆஷஸ் தொடரை வென்றது ஆஸி.,
“கிரிக்கெட் உலகின் சாம்பல் யுத்தம்” என அழைக்கப்படும் பாரம்பரியமிக்க ஆஷஸ் (சாம்பல்) தொடரின் நடப்பா ண்டுக்கான சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் (பெர்த், பிரிஸ்பேன்) ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் டிச., 16 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண் டது. 85 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டின் (170 ரன்கள்) அபரா சதத்தால், 349 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. மிக கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி கள மிறங்கியது. ஆனால் முதல் இன்னிங்சை விட இரண்டா வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் கட்டுக்கோப்பாக விளையாடினர். எனினும் ஆஸ்திரேலிய அணியின் கடைசி கட்ட வியூகத்தால் இங்கிலாந்து அணி 352 ரன்களில் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று,3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் மற்றும் 6 கேட்ச்களை பிடித்த ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்) ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையெடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி “பாக்சிங் டே” அன்று (டிசம்பர் 26ஆம் தேதி) மெல்போர்னில் நடைபெறுகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் இந்தியா அதிர்ச்சி ; பாகிஸ்தான் சாம்பியன்
19 வயதுக்குட்பட்டோருக் கான ஆசியக்கோப்பை இளையோர் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடை பெற்ற நிலையில், இறுதி ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியும், யூசப் தலைமை யிலான பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர் சமீரின் அதிரடி சதத்தால் (113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 172 ரன்கள்) 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. 300 பந்துகளில் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பந்துவீச்சில் கடுமையாக திணறியது. முக்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 26.2 ஓவரில் அனைத்து விக் கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது முறையாக இளையோர் ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் வென்றது. 8 முறை சாம்பியனான இந்தியா இரண்டா மிடம் பிடித்தது.
