51ஆவது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி தமிழ்நாடு அணியின் கேப்டனாக “கண்ணகி நகர் கார்த்திகா” நியமனம்
20 வயதிற்குட்பட்ட 51ஆவது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி டிசம்பர் 25ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறு கிறது. கொல்கத்தா டம் டம் சிறைச்சாலை அருகே உள்ள, உள்ளரங்கு மைதானத்தில் 28ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த கபடி தொடருக்கான தமிழ்நாடு மகளிர் அணியின் பயிற்சி முகாம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி வரை இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ள நிலையில், பயிற்சி முகாமிற்கு இடையே தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டிக்கான தமிழ்நாடு அணி அறிவிக் கப்பட்டுள்ளது. நட்சத்திர வீராங்கனை “கண்ணகி நகர்” கார்த்திகா தலைமையிலான தமிழ்நாடு அணியில் சுஜிதா - சென்னை (கண்ணகி நகர்), அஜிமைசா - தென்காசி, செல்வா ரெபிக்சா - திருநெல்வேலி, சிந்துஜா - திரு நெல்வேலி, அபிநயா - அரியலூர், மதினா பேகம் - நாமக்கல், ஹனிஸ்கா - கோயம்புத்தூர், ஜனனி - திருச்சி, ஜனனி - கரூர், சத்யா - ஈரோடு, சவுந்தர்யா - ஈரோடு, சுகன்யா - ஈரோடு, ஹரினி - ஈரோடு என மொத்தம் 14 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
நூலிழையில் உயிர்பிழைத்த ஸ்டோக்ஸ்
பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3ஆவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் டிச., 16 அன்று தொடங்கியது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் நூலிழை யில் உயிர்பிழைத்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சா ளர் ஸ்டார்க் வீசிய மிரட்டல் பவுன்சரை சரியாக கவ னிக்காமல் தவறவிட, பந்து ஸ்டோக்ஸ் பின்தலையில் பலமாக தாக்கியது. ஹெல்மெட்டுடன் சேர்த்து கூடுதல் தற்காப்புப் பட்டை அணிந்து இருந்ததால், ஸ்டோக்ஸ் காயம் இன்றி உயிர்தப்பினார். பட்டை அணியமலோ அல்லது பந்து சற்று கீழே இறங்கி இருந்தால், ஸ்டோக்ஸ் மிக மோசமான காயத்தில் சிக்கி இருப்பார். கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் அந்நாட்டின் நட்சத்திர வீரர் பிலிப் ஹியூக்ஸ், ஸ்டோக்ஸ் எதிர்கொண்ட பவுன்சர் மாதிரியில் தான் உயிரி ழந்தார். அப்போது ஹெல்மெட் கீழே பட்டை அணியும் முறை இல்லை. ஹியூக்ஸ் உயிரிழந்த பின்பு தான் ஹெல்மெட் கீழே பட்டை அணியும் முறை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சனியன்று அறிவிக்கப்பட்டது. வீரர்கள் விபரம்: சூர்யகுமார் (கேப்டன்), அக்சர் பட்டேல் (துணை கேப்டன்)அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), அர்ஷ்தீப் சிங், , ரிங்கு சிங், ஜாஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்(தமிழ்நாடு), இஷான் கிஷன்.
