games

img

கால்பந்துக்கு முதலீடு இல்லை ஆனால் மெஸ்ஸிக்கு கோடிகள்!

கால்பந்தாட்டத்திற்கு முதலீடு செய்ய தயங்கும் இந்திய அரசு, மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுவது வருத்தமளிப்பதாக இந்திய கால்பந்து அணி வீரர் சந்தேஷ் ஜிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கால்பந்தாட்டத்தை காண லட்சக்கணக்கான ரூபாய் செலவிட ரசிகர்கள் தயாராக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், அதே நேரத்தில் இந்திய உள்நாட்டு கால்பந்தாட்டமே ஆபத்தின் விளிம்பில் இருக்கும் நிலையில், மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுவது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்தியாவில் கால்பந்தாட்டத்தை மக்கள் நேசிக்கிறார்கள்; ஆனால் நமது சொந்த கால்பந்து வீரர்களை ஆதரிக்கும் அளவிற்கு அந்த நேசம் இல்லை என்பது தெரியவருவதாகவும், இதனை அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.