india

img

ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்!

ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும் என இந்திய ரயில்வே புதிய அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை முதல் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்தது. 
கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமத்தை சந்திப்பதால் தற்போது 10 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவின் நிலையை அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி  ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் தெரிந்துகொள்ளலாம்.
பிஎன்ஆர் எண்ணை 139 அல்லது 5676747 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். எந்தவொரு போனிலும் 139 என்ற எண்ணை அழைத்து நிலையை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.