கம்பீர் இல்லாமல் அணித் தேர்வா? பிசிசிஐ-க்குள் தீவிரமடையும் மோதல்
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சனியன்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஜாஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங் டன் சுந்தர் (தமிழ்நாடு), இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் முக்கிய நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான சப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இல்லாமலேயே அணித் தேர்வை இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாடும் நாட்டின் வீரர்கள் தேர்வில், பிசிசிஐ நிர்வாகிகள், தேர்வு குழுவினர், தலைமை பயிற்சி யாளர், கேப்டன் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். குறிப்பாக அணி வீரர்களை தாயைப் போல பாதுகாக்கும் தலைமை பயிற்சியாளருக்கு தான் வீரர்களின் பார்ம், காயம், தொடருக்கான வீரர்களின் செயல்பாடு சூழல் தெரியவரும். ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளர் கம்பீர் இல்லாமலேயே டி-20 உலகக்கோப்பை அணி தேர்வு நடத்தியுள்ளது பிசிசிஐ. அணித் தேர்வுக்கான கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ அழைப்பு விடுக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், கேப்டன் சூர்யகுமார் ஆகியோருடன் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கூட்டத்தில் பங்கேற்று அணியை இறுதி செய்துள்ளார். கம்பீர் செயல்பாடு பிடிக்காமல் போகலாம். அவர் தேர்வு செய்யும் வீரர்கள் அவருக்கு பிடித்தமான வராகவும், ஒருதலைப் பட்சமாகவும் கூட இருக்கட்டும். ஆனால் அவர் தானே இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளர். அவரை விட்டு அணி வீரர்கள் பட்டியலை தேர்வு செய்யும் குழுவை யார் அமைத்தது? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன. மேலும் இந்த விவகாரம் மூலம் பிசிசிஐ-க்குள் மோதல் தீவிரமடைகிறதா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.
மீண்டும் பார்மில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா
தோஹா டைமண்ட் லீக்கில் 90 மீட்டருடன் 2ஆவது இடம்
நாட்டின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா கடந்த ஓராண்டு காலமாக பார்ம் பிரச்சனையில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் கடுமையாக திணறி வந்தார். நீரஜ் சோப்ரா இனி அவ்வளவு தான் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி மற்றும் கட்டுரை களை வெளியிட்டன. இந்நிலையில், கத்தார் தலை நகர் தோஹாவில் டைமண்ட் லீக் தொட ரில் சிறப்பான பங்களிப்பு மூலமாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங் களுக்கு சாட்டையடி பதில் கொடுத்துள் ளார். டைமண்ட் லீக் தொடரின் ஆட வர் ஈட்டி எறிதல் பிரிவில் கடினமான பயிற்சிக்குப் பிறகு களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90.23 மீ தூரம் ஈட்டியை எறிந்து இரண்டா வது இடத்தைப் பிடித்தார். 91.06 மீட்ட ருடன் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் முதலிடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டரு டன் மூன்றாவது இடத்தையும் பிடித்த னர். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜேனா 78.60 மீ தூரம் ஈட்டியை எறிந்து 8ஆம் இடம் பிடித்தார். போட்டிக்குப் பின் செய்தியாளர் களிடம் நீரஜ் சோப்ரா கூறுகையில், “இது கொஞ்சம் கசப்பான முடிவு. ஆனாலும் 90 மீட்டர் ஓட்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் கூறினார். டைமண்ட் லீக்கில் 90 மீட்டர் மற்றும் தேசிய சாதனை யுடன் இரண்டாவது இடம் பிடித்த நீரஜ் சோப்ராவிற்கு சமூகவலைத் தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.
