ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025
இன்று காலிறுதி ஆட்டங்கள் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது இந்தியா
21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், நியூஸிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், வெள்ளியன்று சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
காலிறுதி ஆட்டங்கள்
நியூஸிலாந்து - ஸ்பெயின் மதியம் 12:30 மணி
ஜெர்மனி - பிரான்ஸ் மதியம் 3:00 மணி
அர்ஜெண்டினா - நெதர்லாந்து மாலை 5:30 மணி
இந்தியா - பெல்ஜியம் இரவு 8:00 மணி
அனைத்து ஆட்டங்களும் - சென்னை ராதாகிருஷ்ணன் மைதானம் சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1, ஜியோ ஸ்டார் - ஓடிடி (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1இல் காலிறுதி ஆட்டங்கள் மட்டுமே. தரவரிசை ஆட்டங்கள் பார்க்க முடியாது)
வங்கதேசம் கலக்கல் ; பெனால்டி வரை போராடிய ஆஸ்திரியா
17 முதல் 24ஆம் இடங்களுக்கான ஆட்டங்கள் வியாழனன்று நடைபெற்றன. இதில் நமீபியா - ஆஸ்திரியா அணிகள் மோதிய ஆட்டம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பெனால்டி வரை நீண்ட இந்த ஆட்டத்தில் 2-2 (0-2) என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற வங்க தேசம் - ஓமன் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், வங்கதேசம் அணி 13-0 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றியை ருசித்தது.
மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி
சிலி (சாண்டியாகோ) - 2025
ஆடவர் பிரிவைப் போல, மகளிருக்கும் நடத்தப் படும் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடை பெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டி யை நடத்தும் சிலி உட்பட 24 நாடு கள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரின் 4ஆவது நாளான வியாழனன்று நடை பெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தென் கொரியா - அமெரிக்கா (குரூப் எப்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா மிக எளிதாக வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்பான் - நெதர் லாந்து (குரூப் ஏ) அணிகள் பலப் பரீட்சை நடத்தின. முதல் கால் பகுதி யில் இருந்தே நெதர்லாந்து வீராங்க னைகள் அதிரடியாக விளையாடினர். இறுதியில் 8-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை புரட்டியெடுத்து நெதர்லாந்து அணி சூப்பர் வெற்றி யை ருசித்தது. 18ஆவது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சிலி 1-0 என்ற கோல் கணக்கில் (குரூப் ஏ) மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
