games

img

விளையாட்டு

கவுகாத்தி டெஸ்ட் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையே யான 2ஆவது டெஸ்ட் போட்டி வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசா மில் சனிக்கிழமை அன்று தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்திய வம்சாவளியான செனுரன் முத்துசாமி (109)யின் அபார சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா வீரர் ஜேன்சன் (6 விக்.,) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மிக மோசமான அளவில் திணறியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (58), தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் (48) ஆகியோர் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் குவிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ ஆன் (தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸ் விளையாடுதல்) பெற்றது. ஆனால் பாலோ ஆன் கொடுக்கா மல் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து, டிக்ளர் செய்து இந்திய அணியின் வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயம் செய்தது. மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மிக விரைவிலேயே தொடக்க வீரர்களை (ஜெய்ஸ்வால் (13) - ராகுல் - 6) இழந்தது. டிரா செய்யுமா இந்தியா? செவ்வாய்க்கிழமை 4ஆம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27  ரன்கள் எடுத்து இருந்தது. குல்தீப் யாதவ் (4), தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் (2) ஆகியோர் களத்தில் இருந்தனர். புதன்கிழமை அன்று ஒருநாள் (5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம்) மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 522 ரன்கள் (90 ஓவர்கள் - 540 பந்துகள்) தேவை உள்ளன. இது மிகவும் சிரமமான விஷயம் ஆகும். அதே போல தென்  ஆப்பிரிக்கா வெற்றிக்கு  8 விக்கெட்டு கள் உள்ளன. இது சற்று எளிதான காரியம் ஆகும். அதனால் தென் ஆப்பிரிக்கா கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய அணி தோல்வியை தவிர்த்து டிரா செய்யுமா? அல்லது விக்கெட்டுகளை இழந்து 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆகுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  (5ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் நேரம் : 9:00 மணி - சேனல் : ஸ்டார் ஸ்போர்ஸ், ஜியோ ஸ்டார் - ஓடிடி)

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் : இந்தியா 6ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

25ஆவது காது கேளா தோருக்கான ஒலிம்பிக் போட்டி தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீ பிஸ்டல் பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பிராஞ்சலி பிராஷந்த் துமால் 34 புள்ளிகளுடன் தங்கப்பதக் கத்தை வென்று அசத்தினார். இந்த பிரிவில் உக்ரைன் வீராங்கனை மொசி னா ஹலினா (32 புள்ளி) வெள்ளிப் பதக்கமும், ஜியோன் ஜிவோன் (30  புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  இதன்மூலம் காது கேளாதோருக் கான ஒலிம்பிக் தொடரின், துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இந்தியா 9 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  உக்ரைன் அசத்தல் உக்ரைன் (29 தங்கம், 32 வெள்ளி,  25 வெண்கலம் - மொத்தம் 86 பதக்கங்கள்), ஜப்பான் (13 தங்கம், 9  வெள்ளி, 20 வெண்கலம் - மொத்தம் 42 பதக்கங்கள்), அமெரிக்கா (12 தங்கம், 5 வெள்ளி, 11 வெண்கலம் - மொத்தம் 28 பதக்கங்கள்), சீனா (11 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் - மொத்தம் 45 பதக்கங்கள்), தென் கொரியா  (9 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் - மொத்தம் 39 பதக்கங்கள்) ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.  இன்றுடன் நிறைவு  காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை அன்று நிறைவுபெறுகிறது. கடைசி நாளில் பல்வேறு பதக்கப் போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. (பதக்கப் பட்டியல்  மாலை 6  மணி நிலவரம்)