கவுகாத்தி டெஸ்டில் கல.. கல... வம்பு இழுத்த பண்ட் : பந்தை காற்றில் பறக்கவிட்ட முத்துச்சாமி
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்க, அந்த அணி வீரர் செனுரன் முத்துச்சாமி நிதான ஆட்டத்துடன் விளையாடிக் கொண்டு இருந்தார். 124ஆவது ஓவரின் (வாஷிங்டன் சுந்தர் வீசினார்) 5 பந்தை வீசிய பின்பு (123.5) இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான ரிஷப் பண்ட் “அவரை அடிக்க விடுங்கப்பா (Let Him Hit)” என தென் ஆப்பிரிக்க வீரர் செனுரன் முத்துச்சாமியை ஸ்லெட்ஜிங் (வம்பு) செய்தார். ஆனால் “நன்றி (thank you)” என்று கூறிவிட்டு, 123.6ஆவது பந்தில் (ஓவ ரின் கடைசிப் பந்து) செனுரன் முத்துச் சாமி பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். இது சாதாரண சிக்ஸர் அல்ல. சரி யான கண்டிப்புடன் விளாசப்பட்ட பலம் பொருந்திய ஷாட் ஆகும். ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் வம்பு இழுத்த பண்டிற்கு சிக்ஸ் மூலம் பந்தை காற்றில் பறக்கவிட்டு பதிலடி கொடுத்தார். இதனை இந்திய ரசிகர்களும் கொண்டாடினர். “சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி” என்ற பழ மொழிக்கு ஏற்ப நிதானமாக விளை யாடிக் கொண்டிருந்த செனுரன் முத்துச் சாமியை அதிரடியாக விளையாட வைத்துள்ளார் நமது (இந்திய) அணியின் கேப்டன் பண்ட்.
செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?
சரிவில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை, சதமடித்து மீட்ட செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் தான் செனுரன் முத்துசாமி என செய்திகள் வெளியாகியுள்ளன. 7 வயதில் செனுரன் முத்துசாமி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு இடம்பெயர்ந்துள் ளார் என்றும், நாகப்பட்டினத்தில் இன்னும் இவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு “பைசைக்கிள் கிக்” 40 வயதில் ரொனால்டோ அசத்தல்
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது சவூதி அரேபியா கிளப் அணியான “அல் நசார்” அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிறன்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ரொனால்டோ “பைசைக்கிள் கிக் (BICYCLE KICK)” எனப்படும் தலைகீழாக பல்டி அடிக்கும் முறையில் மிகத் துல்லியமாக கோலடித்தார். 40 வயதில் 954ஆவது கோலை பைசைக்கிள் கிக் ரொனால்டோ அடித்துள்ளதை கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரொனால்டோ கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் மாட்ரிட் (ஸ்பெயின் கிளப்) அணிக்காக பைசைக்கிள் கிக் கோலடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாய்ண்ட்
ஆஸ்திரேலிய பேட்மிண்ட்ன் கோப்பையை கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றுள்ளார். இதற்குமுன் 2017ஆம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றிருந்தார்
