games

img

உலகக்கோப்பை கால்பந்து கரீபியன் தீவின் கனவும் மகத்தான சாதனையும்!

உலகக்கோப்பை கால்பந்து  கரீபியன் தீவின் கனவும் மகத்தான சாதனையும்!


"வெனிசுலா கடற்கரையி லிருந்து வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில், நீலக்கடல் அலைகளுக்கிடையே அமைதியாகக் கிடக்கும் ஒரு சின்னஞ் சிறு தீவு குராக்கோ. வெறும் 171 சதுர மைல் பரப்பளவு, 1.50  லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த  டச்சு கரீபியன் தீவு, கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு புதிய அத்தி யாயம் எழுதியிருக்கிறது. 2026 உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்று, உலகக்கோப்பை களத்தில் கால் பதிக்கும் மிகச்சிறிய நாடு என்ற பெரு மையைப் பெற்றிருக்கிறது குராக்கோ. இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்ற ஐஸ்லாந்து 3.50 லட்சம் மக்கள் தொகை யுடன் சிறிய நாடாகக் கருதப்பட்டது. ஆனால், குராக்கோ அந்த சாதனையை யும் முறியடித்து, கால்பந்து வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறது. கால்பந்தின் மாயம், தீவின் ஆத்மா பவளப்பாறைகள் சூழ்ந்த கடற்கரை களிலும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான வண்ணமயமான வில்லெம்ஸ் டாட் நகரத்தின் குறுகிய தெருக்களிலும் வளர்ந்த இந்தக் கால்பந்து அணி, நெதர் லாந்து அண்டிலிஸ் அணியின் நேரடி வாரிசாக 1991இல் அங்கீகரிக்கப்பட்டது. கடந்த 34 நான்கு ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து அரங்கில் போராடி வந்த இந்த அணி, இன்று தனது கனவை நனவாக்கியிருக்கிறது. பெர்முடா, ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ அணிகளை விஞ்சி, 2026இல் நடைபெறும் 48 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பையில் கொன்காகாப் (வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்ட மைப்பு) பிராந்தியத்தின் ஆறு இடங்களில் ஒன்றைப் பெற்றிருக்கிறது குராக்கோ. பன்முக கலாச்சாரத்தின் வண்ண மயம் குராக்கோவின் வீதிகளில் நடந்தால், மூன்று கண்டங்களின் கலாச்சார கலவையை உணர முடியும். டச்சு காலனித்துவ காலத்தில் இருந்து இன்று வரை, ஐரோப்பிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க கலாச்சாரங்கள் இணைந்து ஒரு தனித்துவமான அடை யாளத்தை உருவாக்கியுள்ளன. மேற்கு அரைக்கோளத்தில் தொடர்ச்சியாக வாழும் மிகப் பழமையான யூத சமூகமும் இங்கு வேர்கொண்டுள்ளது. தெளிவான கடல் நீரில் மூழ்கி எழும் பவளப்பாறைகளும், உலர்ந்த தோல்  கொண்ட ஆரஞ்சுகளிலிருந்து வடி கட்டப்படும் புகழ்பெற்ற குராக்கோ, ஆப்பி ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கற்றாழையும் இந்தத் தீவின் வாழ்வாதாரத்தின் அடையாளங்கள்.  பச்சை மைதானத்தில்  பிறந்த கனவுகள் 1921ஆம் ஆண்டு முதல் கால்பந்து விளையாடிவரும் குராக்கோ, நெதர்லாந்து அண்டிலிஸ் அணியாக ஆறு தசாப்தங்கள் விளையாடியது. 2010இல் தனி நாடாக மாறியபோது, கால்பந்து அணியும் புதிய அடையாளத் துடன் பிறந்தது. குராக்கோ கால்பந்து கூட்டமைப்பின் வழிகாட்டுதலில், பிபா (சர்வதேச கால்பந்து சம்மேளனம்) மற் றும் கொன்காகாப் போட்டிகளில் தொட ர்ந்து பங்கேற்று வந்த இந்த அணி, 2025 கொன்காகாப் தங்கக் கோப்பையிலும் கனடா மற்றும் எல் சால்வடார் போன்ற வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடி அனுபவம் பெற்றது. கால்பந்து மட்டுமல்ல, பேஸ்பால், குத்துச்சண்டை, தடகளம், படகோட்டம் என பல விளையாட்டுகளிலும் சிறந்து  விளங்கும் இந்த சின்ன தீவு, விளை யாட்டு உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகக் கோப்பைக்கான தகுதி, அவர்களின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பதிவாகியிருக்கிறது. ஒரு தீவின் பெருமிதம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்த இரட்டை சுற்றுப் போட்டிகளில், குராக்கோ வீரர்கள் காட்டிய விடாமுயற்சி யும் கூட்டணி உணர்வும் தான் இந்த  வெற்றிக்கு அடிப்படை. பெரிய நாடு களின் பிரம்மாண்ட மைதானங்களில் விளையாடும் வாய்ப்பு இல்லாத இவர்கள், வில்லெம்ஸ்டாட்டின் சின்ன மைதானத்தில் கடின உழைப்பால் தங்களை தயார்படுத்தினார்கள். ஒவ்வொரு போட்டியிலும் தீவு முழுவதும் கொண்டாடப்பட்டது, ஒவ்வொரு கோலும் ஒன்றரை லட்சம் மக்களின் இதயத்தில் எதிரொலித்தது. டச்சு மன்னரின் நாடாக இருந்தாலும், அரசியல் சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தாலும், உலக அரங்கில் தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற ஆவல் இந்த மக்களுக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அந்த ஆவலை, பச்சை மைதானத்தில் தங்களின் வீரர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். புதிய சாதனை இந்தியா உட்பட உலகின் பல பெரிய நாடுகள் இன்னும் கனவு காணும் உலகக்கோப்பை அரங்கில், ஒன்றரை லட்சம் மக்களின் நம்பிக்கையை சுமந்து  குராக்கோ வீரர்கள் இறங்கப் போகிறார் கள். கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பையின் 48 அணிகள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட அரங்கில், குராக்கோவின் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற கொடி பறக்கும். கரீபியன் கடலின் நீலத்தில் மிதக்கும் இந்தச் சிறு தீவு, கால்பந்து உலகிற்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்லித் தருகிறது. சாதனைகள் பரப்பளவிலோ மக்கள் தொகையிலோ அல்ல, மனோ தைரியத்திலும் விடாமுயற்சி யிலும் தான் அடங்கியிருக்கின்றன என்று. குராக்கோவின் இந்த வெற்றி, உலகெங்கி லும் உள்ள சிறிய நாடுகளுக்கு ஒரு உத் வேகமாக, பெரிய கனவுகள் காண்பதற் கான அழைப்பாக ஒலிக்கிறது. - சி.ஸ்ரீராமுலு