மலேசிய ஓபன் பேட்மிண்டன் சீன வீராங்கனையிடம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொ டரின் 69ஆவது சீசன், ஜனவரி 6ஆம் தேதி அந்நாட்டின் தலை நகர் கோலாலம்பூரில் தொடங்கியது. உலகின் முன்னணி நட்சத்திரங் கள் பங்கேற்றுள்ள இந்த தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து - சீனாவின் ஒய்.யாங்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒய்.யாங் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரி யாவின் ஒய்.ஆன் - சீனாவின் எப்.சென் மோத இருந்தனர். ஆனால் போட்டி தொடங்கும் முன்பே ஒய்.யாங் காயம் காரணமாக வெளியேற, தென் கொரி யாவின் ஒய்.ஆன் அதிர்ஷ்ட வாய்ப்பு டன் இறுதிப் போட்டிக்கு முன்னே றினார். இந்த பிரிவின் இறுதிப்போட்டி ஞாயிறன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் பெகுலா அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன் னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென் னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், சனியன்று மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் தரவரிசை யில் 4ஆவது இடத்தில் உள்ள அமெ ரிக்காவின் பெகுலா,14ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் கோஸ் டிக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பெகுலா எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் முதலே ஆக்ரோ ஷமாக விளையாடிய கோஸ்டிக் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். 2ஆவது அரையிறுதி ஆட்டத் தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின் சப லென்கா 11ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த பிரிவின் இறுதிப்போட்டி ஞாயிறன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா - நியூஸி., இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்
3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாட நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு
இடம் : வதோரா, குஜராத் நேரம் : மதியம் 1.30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
