சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் நேற்று போர்ச்சுகல் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார். இதன்மூலம் உலகளவில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்தார்.
1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அல் டாய், 109 சர்வதேச கோல்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், நேற்று இந்த சாதனையை ரொனால்டோ முறியடித்தார்.
தற்போது இவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 111 ஆகும். இந்த போட்டியின் கடைசி 30 நிமிடங்களில் ரொனால்டோ அடித்த இந்த இரண்டு கோல்கள் போர்ச்சுக்கல் அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தது. ரொனால்டோ இதுவரை அடித்த கோல்களில் கிட்டத்தட்டப் பாதி எண்ணிக்கையிலானவை கடைசி 30 நிமிடங்களில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.