games

img

விளையாட்டு...

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குத லுக்கு பிறகு மே 8ஆம் தேதி இந்தி யா - பாகிஸ்தான் இடையே போர் பதற் றம் நீடித்தது. இதனால் மே 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் இடைக் காலமாக தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், தள்ளிவைக்கப் பட்ட ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை அன்று (மே 17) மீண்டும் தொடங்கு கின்றன. போட்டியின் வரிசை மற்றும் மைதானங்கள் உள்ளிட்டவைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. முன்பு அறிவிக்கப்பட்ட அணிகளின் மோதல் தொடர்பாக அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மே 17 முதல் மே 27 வரை 10 நாட்கள் லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்பிறகு மே 19ஆம் தேதி முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறுகின்றன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டி நடைபெறும் மைதானங்கள் தொடர்பாக எவ்வித தகவலும் வெளி யாகவில்லை. இத்தகைய சூழலில் தள்ளிவைக்கப்பட்டப் பின் நடை பெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்க ளூரு - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெறு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025  இன்றைய ஆட்டம்

நேரம் : இரவு 7:30 மணி இடம் :சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

பெங்களூரு - கொல்கத்தா

(58ஆவது லீக் ஆட்டம்)

வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிப்பு ; சுவாரஸ்யமாக நகருமா ஐபிஎல்?

தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பிரச்சனையின்றி மீண்டும் தொடங்கினாலும், வெளிநாட்டு வீரர்கள் பலர் மீண்டும் பங்கேற்க தயங்கி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் போதே  ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்பிவிட்டனர். போர் பதற்றம் நீங்கிய பின்பு ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு வீரர்களை மீண்டும் இந்தியாவிற்கு வந்து விளையாடும் படி அழைத்தது.  ஆனால் பயங்கரவாத தாக்குதல் பிரச்சனை, தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரிய அனுமதி மறுப்பு, டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடருக்கான பயிற்சி உள்ளிட்ட காரணங்களை கூறி, வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஐபிஎல் அணிகள் புதிய வெளிநாட்டு வீரர்களை அணியில் சேர்த்து  வருகிறது. எனினும் போர் பதற்றத்திற்கு முன்பு நடைபெற்றது போன்று மீண்டும் ஐபிஎல் போட்டிகள் சுவாரஸ்யமாக நகருவது சிரமம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்”

இந்தியாவில் நிலைமை சரியில்லாததால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர் பாக அவர் மேலும் கூறுகையில்,”வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டி களுக்காக இந்தியாவிற்கு திரும்புவது நல்லது அல்ல. இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் களால் ஏற்பட்டுள்ள நிலைமைகளில், பணத்தை  விட பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொள்ள  வேண்டும். அதனால் வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் கலந்துகொள்வதை தவிர்ப்பது நல்லது” என அவர் கூறியுள்ளார்.