games

img

விளையாட்டு

இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுப்புபாகிஸ்தானிடம்  போட்டி நடுவர் மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ

ஆடவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரு கிறது. செப்., 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வின் போது இந்திய கேப்டன் சூர்ய குமார், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் கைக்குலுக்க மறுத்துவிட்டார். அதேபோல போட்டி முடிந்த பின்பும் இந்திய வீரர்கள், பாகி ஸ்தான் வீரர்களிடம் கைக்குலுக்க வில்லை. இது விளையாட்டு உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) போட்டி நடுவர் ஆன்டி  பைகிராப்ட் உத்தரவின் பேரில் தான் இந்திய வீரர்கள் கைக்குலுக்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் வாரி யத்திடம் (ஐசிசி) புகார் அளித்தது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வில்லை என்றால், ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகுவோம் என பிசிபி அறிவித்தது. ஆனால், நடுவர் மீது எந்தத் தவறும் இல்லை என ஐசிசி கூறியதாக செய்திகள் வெளியா கின. பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறி னால் ரூ.140 கோடி  இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை தகவலும் வெளியாகின. இந்நிலையில், இதனிடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத துக்கு நடுவர் ஆன்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன், பிசிபியிடம் மன்னிப்பு கேட்டதால் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆட்டத்தில் (புதன்கிழமை அன்று) விளையாடியது என தகவல் வெளியாகியது. மேலும் பிசிபி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நடுவர் பைகிராப்ட் மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இது போலியான வீடியோ என மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்தியா - பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை தொடர் நடுகட்டத்தை தாண்டியுள்ள நிலையில், சூப்பர் 4 சுற்று 20ஆம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் “பி” பிரிவில் இருந்து தகுதி பெற்ற 2 அணிகள் மோது கின்றன. அதனையடுத்து 21ஆம் தேதி நடை பெறும் 2ஆவது ஆட்டத்தில் “ஏ” பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ள 2 அணிகள் மோதுகின்றன. அதன்படி 21ஆம் தேதி நடைபெற உள்ள சூப்பர்4 சுற்றின் 2ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்து கின்றன. இதற்கு முன் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சூப்பர் 4 சுற்றில் வெற்றி அடையப் போவது யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முகமது சாலா புதிய சாதனை 2025-26

ஆம் ஆண்டிற் கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் தனது முதல் ஆட்டத் தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணி (இங்கி லாந்து கிளப்), அத்லெடிக்கோ மாட்ரிட் (ஸ்பெயின்) மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது லிவர்பூல் அணி. குறிப்பாக இந்த ஆட்டத்தில் லிவர்பூல் நட்சத்திர வீரர் முகமது சாலா 6ஆவது நிமிடத்தில் கோலடித்தார். மேலும் 4ஆவது நிமிடத்தில் கோலடிக்க அசிஸ்ட் (உதவி) செய்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 6 நிமிடங்களில் ஒரு அசிஸ்ட், ஒரு கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் கால்பந்து உலகின் எகிப்திய அரசன் என்று அழைக்கப்படும் முகமது சாலா.