மூத்த தலைவர் டி.கே.ஆருக்கு ‘அகவை 85’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் செப்டம்பர் 30 அன்று 85ஆவது அகவையில் அடியெடுத்து வைத்தார். இந்நிலையில், அவரை கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், கே. சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. சித்தன், தோ. வில்சன், க. சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன் உள்ளிட்ட தலைவர்களும் தொலைபேசி மூலம் தோழர் டி.கே. ரங்கராஜனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.