tamilnadu

சென்னையில் செப்டம்பரில் 121 சைபர் குற்றங்களில் ரூ.1.27 கோடி மீட்பு

சென்னையில் செப்டம்பரில் 121 சைபர் குற்றங்களில் ரூ.1.27 கோடி மீட்பு

சென்னை, அக்.7- சென்னை பெருநகர காவல் துறை செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து ரூ.1.27 கோடியை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளது. காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், 1930 அவசர அழைப்பு மற்றும் நேரடி புகார்கள் மூலம் பெறப்பட்ட 205 மனுக்களில் 121 வழக்குகளில் நவீன தொழில்நுட்ப விசாரணை மூலம் பணம் மீட்கப்பட்டது. மண்டல வாரியான மீட்பு விவரம் வருமாறு, மத்திய குற்றப்பிரிவு: 46 மனுக்களில் 38 வழக்குகளில் ரூ.56.12 லட்சம், வடக்கு மண்டலம்: 20 மனுக்களில் 42 வழக்குகளில் ரூ.27.24 லட்சம் மேற்கு மண்டலம்: 34 மனுக்களில் 9 வழக்குகளில் ரூ.21.13 லட்சம், தெற்கு மண்டலம்: 55 மனுக்களில் 21 வழக்குகளில் ரூ.12.66 லட்சம் கிழக்கு மண்டலம்: 50 மனுக்களில் 11 வழக்குகளில் ரூ.10.32 லட்சம், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரை மொத்தம் ரூ.21.69 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.