கோவூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
காஞ்சிபுரம், அக்.7- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கோவூா் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு முகாமில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரி சோதனைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்ட றிந்து, டாக்டர் முத்து லட்சுமி மகப்பேறு நிதி யுதவி திட்டத்தின் கீழ், 11 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்க ளும், மருத்துவ காப்பீடு அட்டை 4 பயனாளிக ளுக்கும், தாட்கோ சார்பில் 25 தூய்மைப் பணி யாளா்களுக்கு நலவாரிய அட்டைகளும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழி லாளா்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற 3 தொழி லாளா்களுக்கு அடையாள அட்டைகளையும், 1 பய னாளிக்கு ஓய்வூதிய ஆணையையும் வழங்கி னார். இந்த முகாமில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் த.செந்தில், மருத்துவக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.