95 வயது நோயாளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை ஆசிய அளவில் மைல்கல் சாதனை
சென்னை, அக்.7- சென்னையைச் சேர்ந்த புரோமெட் மருத்துவமனை இதயவியல் மற்றும் அவசர சிகிச்சை துறை களில் அதிநவீன சிகிச்சை யளிக்கும் முன்னணி மருத்துவமனை ஆகும். இங்கு 95 வயது நோயாளி ஒருவருக்கு வெற்றி கரமாக பாதுகாக்கப்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. ஆசிய அளவில் இவ்வளவு வயதான நோயாளிக்கு இத்தகைய சிகிச்சை செய்யப்படுவது மிகவும் அரிதானதாகும். இம் மருத்துவமனையில் எஸ் எனும் நோயாளி, கடுமை யான மார டைப்பை அடுத்து அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தின் செயல்பாடு மோசமாக பலவீனமடைந்திருந்தது. அவரது வயது முதிர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, 2023ல் பாதித்த பக்கவாதம் என்று பல பிரச்சனைகள் சிகிச்சைக்கு சவாலாக இருந்தன. இருப்பினும் இம்மருத்துவமனையின் இயக்குநரும் இதயவியல் துறையின் தலைவருமான மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் தலை மையிலான மருத்துவர் குழு, அந்நோயாளிக்கு சிகிச்சை யளிக்க முடிவு செய்தது. சிக்கல் மிகுந்த பி.சி.ஐ எனப்படும் முறையை பயன்படுத்தி அவருக்கு சிகிச்சைய ளிக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளார். அதிக இடர்மிகுந்த இந்த நடைமுறையின்போது நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த , மருத்துவர் குழு இம்பெல்லா சிபி எனப்படும் சிறிய அளவிலான இதய பம்ப்-ஐப் பயன்படுத்தியது. இது போல பல்வேறு முறை களை இணைத்து முதிய நோயாளிகளுக்கு சிகிச்சை யளிப்பது பொது வாகவே அரிதான நிகழ்வு ஆகும் என்று மருத்துவமனையின் இருதய மருத்துவ துறை இயக்குநர் மற்றும் தலைவரான டாக்டர் அருண் கல்யாணசுந்தரம், கூறினார்.