5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, அக்.7 – 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் செவ்வாயன்று (அக். 7) சங்க தலைவர் வி. பாலாஜி தலைமையில் ராணிப்பேட்டை டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலாஜா தாலுகா பொது தொழிலாளர் சங்க செய லாளர் எ. ரமேஷ் கலந்து கொண்டு பேசி னார். உடன் எஸ். ஆனந்தன், வி. சுபாஷ், குபேந்திரன் கலந்து கொண்டனர். இறுதி யாக சுதாகர் நன்றி கூறினார். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழி லாளர் களுக்கு சட்டப்படியான போனசை தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்கேன் செய்யும் வேலைக்கு கூலி வழங்க வேண்டும். பெட்டிக்கு ரூ. 3.50என ஒரே மாதிரி ஏற்றுக் கூலி என்பதை டெண்டர் படிவத்தில் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஹெச்.எல் என்ற பெயரில் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலியில் மாதாமாதம் பணம் கட்ட சொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். குடோன்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.