games

img

கோப்பையைப் பெற மறுப்பு; விளையாட்டு உணர்வுக்கு அவமதிப்பு - சி ஸ்ரீராமுலு

கோப்பையைப் பெற மறுப்பு; விளையாட்டு உணர்வுக்கு அவமதிப்பு

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தி யா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால், வெற்றியின் இனிமையை விட கசப்  பான நிகழ்வுதான் அதிகம் பேசப்பட்டது. பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கோப்பையை வழங்கப் போவதாக அறி வித்தபோது, இந்திய வீரர்கள் அவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தனர். இறுதியில் கோப்பையில்லாமலேயே ‘வெற்றி கொண்டாட்டத் தில்’ ஈடுபட்டனர். இதுவெறும் சம்பவமல்ல, விளையாட்டு உணர்வுக்கு இழைத்த பெரும் அவமதிப்பு. “வென்றவர் வீரர், தோற்றவர் அனுபவசாலி” என்ற  உன்னத நோக்கத்தை இது சிதைத்துவிட்டது.  அரசியலும் மத வெறுப்பும் விளையாட்டை அழிக்கின்றன “விளையாட்டில் அரசியல் ஆபத்து” என்பதை நாம் உணர வேண்டும். ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியில் விளையாட்டு அரசியல் மற்றும் மத வெறுப்பின் களமாக மாறிவிட்டது. “ஆபரேஷன் சிந்தூர் “ என்ற பெயரிலும் மத பிரச்சனையை விளையாட்டில் புகுத்திய ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை மிகவும் அபத்தமானது. போட்டிகளின்போது மத வெறுப்பு முழக்கங் கள், சமூக வலைதளங்களில் வெறுப்பு  பரப்புதல், ரசிகர்களிடையே வன்முறை ஆகியவை அதிகரித்து வருகின்றன. இதனால் வீரர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது, விளையாட்டின் தரம் குறைகிறது, நேர்மையான போட்டி உணர்வு மறைகிறது. வரலாறு உணர்த்தும் பாடங்கள் விளையாட்டில் அரசியல் தலையீடு புதிதல்ல. 1936-இல் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி பெர்லின் ஒலிம்பிக்ஸை இனவாதத்திற்கு பயன்படுத்த முயன்றது. ஆனால், ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு  தங்கப் பதக்கங்கள் வென்று அந்த கொள்கைக்கு பெரும் அடி கொடுத்தார்.  மறுபுறம், 1995-இல் நெல்சன் மண்டேலா  தென்னாப்பிரிக்க ரக்பி அணியின் வெள்ளை யின கேப்டனுக்கு கோப்பையை வழங்கிய காட்சி இனவாதத்திற்கு எதிரான வெற்றியின் சின்னமாகக் கொண்டாடப்படுகிறது. 1999-இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு தமிழக ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர். 2023-இலும் சென்னைக்கு வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து “கிரிக்கெட்டுக்கு மரியாதை” அளித்தனர். இது சென்னையின் விளையாட்டு நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய தருணங்கள்.  யாருடைய சொத்து விளையாட்டு?  அரசியல் தலைவர்கள் விளையாட்டை தங்கள் நலனுக்காக பயன்படுத்துவதை உடனடி யாக நிறுத்த வேண்டும். விளையாட்டு மனித குலத்தின் பொதுச் சொத்து, சில தனிநபர்களின் அரசியல் அல்லது மத நலன்களுக்கான கருவி யல்ல. ஆட்சியாளர்கள் விளையாட்டை ஒரு பால மாகப் பார்க்க வேண்டுமே தவிர, பிரிவினையின் கருவியாக அல்ல.  வீரர்கள் விளையாட்டின் தூதர்கள். அவர்கள் களத்தில் காட்டும் நடவடிக்கை லட்சக்கணக்கான ரசிகர்களைப் பாதிக்கிறது. கோப்பை பெற மறுப்பு, கைகுலுக்க மறுப்பு போன்ற செயல்கள் விளை யாட்டு உணர்வுக்கு எதிரானவை. வீரர்கள் விளை யாட்டில் மட்டும் சிறந்திருந்தால் போதாது, பண்பாடு மிக்கவர்களாகவும், மனிதநேயத்திலும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.   ஊடகங்களும் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும். விளையாட்டுச் செய்திகளை ‘உணர்ச்சிகரமானதாக’ மாற்றாமல் விளை யாட்டின் நேர்மறையான அம்சங்களை முன்னி லைப்படுத்த வேண்டும். ரசிகர்கள் விளை யாட்டின் உயிர்நாடி. அவர்களின் ஆரவாரம் வெறுப்பில் இல்லாமல் அன்பில் வேரூன்றி இருக்க வேண்டும்.  தேவை மனிதநேயம்  விளையாட்டு வெறும் வெற்றி-தோல்வியின் கணக்கல்ல, மனிதநேயத்தின் கொண்டாட்டம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மனித நேயம். எதிரணியிலும் நண்பனைக் காண்பதே விளையாட்டு உணர்வு.  2025 ஆசியக் கோப்பை சம்பவம் நமக்குக் கடுமையான எச்சரிக்கை. விளையாட்டுத் துறை யில் அனைவரும் - வீரர்கள், ஆட்சியாளர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் - இணைந்து விளை யாட்டை அரசியல் மற்றும் மத வெறுப்பி லிருந்து காப்பாற்ற வேண்டும். விளையாட்டு ஓர் உலகளாவிய மொழி - அது அனைவரை யும் பேச வைக்கும், அனைவரையும் புரிந்து கொள்ள வைக்கும். விளையாட்டில் வீரர் யார் என்பது முக்கியமல்ல, விளையாட்டு உணர்வு  வீரர் யார் என்பதுதான் முக்கியம். இந்த சிந்தனையுடன் நாம் முன்னேறினால்தான் விளையாட்டு தன் உண்மையான நோக்கத்தை அடைய முடியும், மனிதகுலத்தை ஒன்றிணை க்கும் சக்தியாக திகழ முடியும்.