games

img

விளையாட்டு

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் அரசியலால்  மறைக்கப்பட்ட வீரர்களின் திறமைகள், சுவாரஸ்யங்கள்

நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்ந்தன. J இந்தியா, பாகிஸ்தான் அணி இளம் வீரர்களுடன் அபார ஆட்டத்தை வெளிப் படுத்தின. J இந்திய அணியின் தொடக்க வீரர் அபி ஷேக் சர்மா இந்தியாவின் “ஜெயசூர்யா  (இலங்கை அணியின் அதிரடி பேட்டர்)” என அழைக்கப்படும் அளவிற்கு அதிரடியாக விளையாடி, அதிக ரன் குவிப்புடன் (314 ரன்கள்) ஆசியக் கோப் பையில் புதிய வரலாறு படைத்தார். J பெயர் தெரியாத வீரர்களுடன் வந்த இலங்கை அணி வலுவான நிலையில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவை சூப்பர் ஓவர் வரை திணறடித்து விட்டு சென்றது. J ஈரப்பதம் உள்ள ஆடுகளத்தில் 17 விக் கெட்டுகளை (அதிக விக்கெட்டுகள்) வீழ்த்தி இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பிரமிக்க வைத்தார். J ஆசியக் கண்டத்தில் நட்சத்திர அணி களில் ஒன்றான ஆப்கானிஸ்தானை ஒரு போட்டியில் கூட இந்தியா எதிர் கொள்ளவில்லை.  J இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் வெல்ல ஒரே காரணம் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி தான். அவரது சிறப்பான பந்துவீச்சால் தான் பாகிஸ்தான் அணி குறைந்த வெற்றி இலக்கை நிர்ணயித்தது. J போதியளவு அனுபவம் இல்லாமல் பாகிஸ்தான் அணியை இறுதிக்கு அழைத்துச் சென்று அசத்தினார் அந்நாட்டு கேப்டன் சல்மான் அகா. Jசண்டை சச்சரவுகளுடன் விளையாடும் இலங்கை - வங்கதேசம் சமத்து பிள்ளையாக விளையாடின. J41 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதன் முறையாக ஆசியக் கோப்பையில் இறுதிக்கு முன்னேறி விளையாடியது. J திடீரென ஆல்ரவுண்டராக மாறி பந்துவீச்சில் ஜொலித்தார் சென்னை யின் செல்லக்குட்டி (ஐபிஎல் புனை பெயர்) சிவம் துபே. இவ்வாறு பல சுவாரஸ்யமான நிகழ்வு கள் மற்றும் வீரர்களின் திறமைகள் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் அரசி யலால் கொண்டாடப்படவில்லை. மாறாக மறைக்கப்பட்டன. விளையாட்டில் அரசி யலை தேடுவது, ஈடுபவது விளையாட்டு உலகிற்கு வேதனையான விஷயமின்றி ஆபத்தானதும் கூட.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2025 ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இன்று மோதல்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973ஆம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி 13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா செவ்வாய்க் கிழமை அன்று தொடங்கி, நவ., 2ஆம் தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் புதன்கிழமை அன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூ ஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்து கின்றன.

ஆஸ்திரேலியா   நியூஸிலாந்து

நேரம் : மதியம் 3:00 மணி
இடம் : எம்பிசிஏ மைதானம், இந்தூர், ம.பி.,
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

அணிகளும்... சுற்றுகளும்...

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தமிழ்நாட்டில் புரோ கபடி

இன்றைய ஆட்டங்கள் ஹரியானா - ஜெய்ப்பூர் நேரம் : இரவு 8 மணி J J J மும்பை - தமிழ் தலைவாஸ் நேரம் : இரவு 9 மணி இரண்டு ஆட்டங்களும் : எஸ்டிஏடி மைதானம், சென்னை (சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே)

டிக்கெட் தேவைக்கு

புரோ கபடி தொடரில் தமிழ்நாடு அணியாக கருதப்படும் தமிழ் தலைவாஸ் புதன்கிழமை அன்று மும்பை அணியை எதிர்கொள்கி றது. சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடு வதால் இந்த ஆட்டம் தமிழ்நாட்டு ரசி கர்களிடையே அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் தேவைக்கு புக் மை ஷோ  (https://in.bookmyshow.com/explore/kabaddi) இணைய தளம் மூலமாகவும் டிக்கெட்டுகள் பெறலாம்.