games

img

ஆழ்கடல் அரசியின் சாதனைப் பயணம்

ஆழ்கடல் அரசியின் சாதனைப் பயணம்

இம்பாசிபிள்’ திரைப்படத் தில் டாம் க்ரூஸ் 500 அடி ஆழத்தில் மூழ்கி சாதிக்கும் அதிரடி காட்சிகள் வெறும் கற்பனையாக இருக்கலாம். ஆனால், சென்னை மண்ணில் பிறந்த பெண் ஒரு வர், சுவாசக் கருவிகளின்றி கடலின் ஆழத்தில் இறங்கி உண்மையிலேயே அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி வரு கிறார். அவர், மெரினா கடற்கரையின் உப்புக் காற்றில் வளர்ந்த ஒரு சாதாரண சென்னைப் பெண். இன்று இந்தியா வின் ஆழமான பெண் ஃப்ரீடைவராக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். 32 வயது வீராங்கனையின் கதை, கனவுகளைப் பின்தொடர்வதன் அற்புத சக்தியை உணர்த்தும் ஒரு உத்வேக கதையாகும். கார்ப்பரேட் உலகிலிருந்து கடலின் ஆழத்திற்கு சென்னையில் ஒரு பழமைவாத குடும்பத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர் அர்ச்சனா. தந்தையின் பணி  மாறுதலால் மும்பைக்கு குடிபெயர்ந் தார். அங்கு பள்ளி படிப்பை நிறைவு செய்து, இளங்கலையில் பட்டம் பெற்று, ஏஇசட்பி (AZB) அண்டு பார்ட்னர்ஸ் போன்ற புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தில் கார்ப்பரேட் வழக்கறிஞராக பணி யாற்றிக் கொண்டிருந்தார். சட்ட ஆவ ணங்களின் அழுத்தமான வாழ்க்கை யில் மூழ்கியிருந்த அவர், 2019இல் அந்த மான் தீவுகளுக்கு மேற்கொண்ட ஒரு தனிப்பயணம் அவரது வாழ்க்கை யையே மாற்றிவிட்டது. படகில் இருந்து  கடலில் குதித்தபோது அடித்த அந்த ஒரு டைவ்,  உலகத் தரம் வாய்ந்த விளை யாட்டு வீரராக மாற்றியது. அந்தமான் - காதலின் பிறப்பிடம் அந்தமான் தீவுகள் அர்ச்சனாவின் இதயத்தில் என்றும் நிலைத்து நிற்கும் இடம். “அது கடல். நான் எங்கு சென்றா லும், கடல் ஆமைகள் தங்கள் பிறந்த கடற்கரையில் எப்படி திரும்புகின்றன அதைப்போல நான் அந்தமானுக்குத் திரும்பி வருவேன்,” என்று அவர் கவிதை நயத்துடன் விவரித்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. அதைத் தொடர்ந்து, ஹேவ்லாக் மற்றும் நீல் தீவு முழுவதும் உள்ள அனைத்து தளங்களிலும் டைவ் செய்து, டைவ் மாஸ்டராக பணியாற்றிய அனு பவம் அவருக்கு கடலின் மீதான ஆழ மான புரிதலைக் கொடுத்தது. 11 தேசிய சாதனைகளின் பெருமை 2023இல் தொடங்கிய அர்ச்சனா வின் ஃப்ரீடைவிங் பயணம் வெறும் இரண்டே ஆண்டுகளில் அபரிமித மான வெற்றிகளைத் தந்துள்ளது. விளை யாட்டின் நான்கு ஆழமான பிரிவு களிலும் தேசிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். மொத்தம் பதினொரு சாத னைகள் அவரது பெயரில் பதிவாகி யுள்ளது. சமீபத்தில் இந்தோனேஷியா வில் நடைபெற்ற மனாடோ அப்னியா போட்டியில்  40 மீட்டர் ஆழத்தை,  40 மீட்டர் தூரத்தைத் தாண்டிய முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றுள்ளார். அர்ச்சனாவின் சாதனைகள் வெறும் தேசிய எல்லைகளுக்குள் நின்றுவிட வில்லை. இந்தியாவின் சர்வதேச டைவிங் அசோசியேஷன் (Interna tional Association of Diving) சான்ற ளிக்கப்பட்ட முதல் நடுவராகவும், முதல் மோல்கனோவ்ஸ் பிராண்ட் தூதராக வும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிபி பிர்லா  பெண் தலைவர்களுக்கான பெல்லோ ஷிப் (Fellowship Award) விருதும் அவரது தலைமைத்துவத் திறனை அங்கீகரித்துள்ளது. அமைதியின் ஆழத்தில் கண்டெடுத்த சக்தி இந்தியாவில் ஒரு பெண்ணாக வாழ்க்கையை வழி நடத்துவதில் உள்ள சவால்களைப் பற்றியும் பேசும் அர்ச்ச னா, “வெளிப்புறமாக அழைத்துச் செல் லும் ஸ்கூபா டைவிங்கைப் போலல்லா மல், ஃப்ரீடைவிங் உள்நோக்கி இழுக் கிறது. எந்த தொட்டியும் இல்லை, குமிழ்கள் இல்லை, சத்தமும் இல்லை. மூச்சு, உடல் மற்றும் கடலின் பரந்த அமைதி மட்டுமே. நிலத்தில் நான் எப் போதும் இல்லாத அளவுக்கு நீருக்கடி யில் பாதுகாப்பாக உணர்ந்தேன்.” இந்த அனுபவம் பல இளம் பெண்களுக்கு உத் வேகமாக அமைந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார். எதிர்காலத்தின் திசையும் கனவுகளும் உலகின் சிறந்த ஃப்ரீடைவர்களுடன் போட்டியிட்டு, இந்தியாவின் நிலை யை உலகளாவிய அரங்கில் மேலும் உயர்த்துவதே அவரது இலக்கு. ஒரு வருடத்திற்குள் ஒன்பது தேசிய சாத னைகளைப் படைத்த இந்த வீராங்கனை யின் வேகத்தைப் பார்க்கும்போது, இன்னும் பல அதிசயங்களை நம்மால் எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டின் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை வாழ்த்தியது, அவரது சாதனைகளுக் கான அரசின் அங்கீகாரத்தைக் காட்டு கிறது. அர்ச்சனா சங்கர நாராயணனின் கதை வெறும் விளையாட்டுச் சாத னைகளின் பட்டியல் மட்டுமல்ல. இது தன்னம்பிக்கை, துணிவு மற்றும் கனவு களைப் பின்தொடரும் அசாத்திய சக்தி யின் கதையாகும். கடலின் ஆழத்தில் அவர் கண்டெடுத்தது தனக்கான பாதை யை மட்டுமல்ல, வரும் தலைமுறை யினருக்கான வழியையும்தான்.  கடலின் ராணியான அர்ச்சனாவின் இந்த அற்புத பயணம் இன்னும் தொடர்கிறது. ஒவ் வொரு டைவும் ஒரு புதிய சாத னையை நோக்கிய பயணம், ஒவ்வொரு மூச்சும் இந்தியாவின் பெருமைக்காக. அவரது கதை நமக்கு நிரூபிக்கிறது - கனவுகளுக்கு எல்லையில்லை, ஆழத்திற்கும் எல்லையில்லை!