உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் வெள்ளி வென்றார் மீராபாய் சானு
நார்வே நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ தூக்கி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மீராபாய் சானு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். குறிப்பாக இதே பிரிவில் வடகொரியாவைச் சேர்ந்த ரி சாங் 213 கிலோ (91 கிலோ + 122 கிலோ) பளுவைத் தூக்கி உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுக்சரோயன் 198 கிலோ (88 கிலோ + 110 கிலோ) பளுவைத் தூக்கி வெண்கலம் வென்றார்.
மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் வருகை உறுதியானது
கால்பந்து உலகின் நட்சத் திர வீரரும், அர்ஜெண்டி னா அணியின் கேப்டனுமான லயோ னல் மெஸ்ஸி (38) இந்திய சுற்றுப்பய ணத்தை உறுதி செய்தார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், டிசம்பர் 13ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வுக்கு செல்லும் மெஸ்ஸி, அங்கு சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற உள்ள “கோட் (GOAT - “Greatest Of All Time) இசை நிகழ்ச்சி மற்றும் கோட் கோப்பை” கண்காட்சி போட்டியில் பங் கேற்கிறார். தொடர்ந்து அங்கு அவ ரது 25 அடி உயர சிலை திறக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து அகமதா பாத், மும்பை செல்லும் மெஸ்ஸி டிசம்பர் 15ஆம் தேதி தில்லியில் பிர தமர் மோடியை சந்தித்து உரையாடுவது டன், அவரது சுற்றுப்பயணம் நிறை வடைகிறது. இதுதொடர்பாக மெஸ்ஸி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா கால்பந்தை நேசிக்கும் ஒரு தேசம். ரசிகர்கள் அற்புதமானவர்கள். இந்தியாவுக்கு செல்ல இருப்பது எனக்கு மிகப்பெரிய கவுரவம். 14 ஆண்டுக்கு முன்பு நான் அங்கு சென்றி ருந்த போது பெற்ற நல்ல நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கிறது. எனது கால்பந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன், புதிய தலைமுறை ரசிகர்களை சந்திப்பதை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என அவர் கூறினார். கடைசியாக மெஸ்ஸி 2011ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு மெஸ்ஸி மீண்டும் இந்தியா வருகிறார். முன்னதாக மெஸ்ஸி தலைமை யிலான அர்ஜெண்டினா அணி நவம்பர் மாதம் கேரளாவுக்கு வருகை தந்து நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடும் திட்டமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஜிம்பாப்வே, நமீபியா தகுதி
2026ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக் கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறு கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற் கின்றன. இந்தத் தொடரில் டி-20 தரவரிசை பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேர டியாகத் தகுதிபெறும். மற்ற 12 அணி கள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இடம்பெறும். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆப்பிரிக்க கண்ட நாடுகளின் தகுதிச் சுற்று ஆட்டங் களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் திய ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் டி-20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றுள்ளது. முன்னதாக அமெரிக்க கண்டங்களில் இருந்து கனடாவும், ஐரோப்பிய பகுதிகளில் இருந்து நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளும் தகுதி பெற்றுள்ளன. தற்போது வரை 12 அணிகள் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் 8 அணிகள் பாக்கி உள்ளன. தகுதிச் சுற்றுகள் மொத்தமாக நிறைவடைந்த பின்பு 20 அணிகளின் பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.