games

img

விளையாட்டு

இந்தியாவுக்கு ஆசியக் கோப்பையை கொண்டு வருவதில் நீடிக்கும் தாமதம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.  ஆனால் இந்திய அணிக்கான வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக் கெட் வாரிய தலைவருமான மொசின் நக்வி கொடுக்க இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை பெற  முடியாது என இந்திய வீரர்கள் அறி வித்தனர். இதையடுத்து, அலுவலர் ஒருவர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார்.  இந்த கோப்பை தற் போது துபாயில் உள்ள ஆசியக் கிரிக்கெட் வாரியத் தலைமை அலுவல கத்தில் உள்ளது. இதற்கிடையே மொசின் நக்வி பிசிசிஐ-யிடம் மன்னிப்பு கோரியதாக செய்திகள் வெளியாகின.  இந்நிலையில், “இந்திய அணிக்கு கோப்பை வேண்டுமானால் ஆசிய கிரிக் கெட் வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெற்றுக் கொள்ளலாம் என மொசின் நக்வி தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக பாகிஸ்தான் ஊடக நிறுவனமான ஜியோ சூப்பர் தெரிவிக்கையில்,  “மீண் டும் முறையான பரிசளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தால், அதில் கோப்பை  யை வழங்குவேன்” என அவர் தெரிவித் துள்ளார்.  இதன்காரணமாக, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்துக்கு ஆசியக் கோப்பையை கொண்டு வருவதில் தாமதம் நீடிக்கிறது.

அகமதாபாத் டெஸ்ட் 162 ரன்களில் சுருண்ட மேற்கு இந்தியத் தீவுகள்

2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்து  முதலில் களமிறங்கியது. முகமது சிராஜ், பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 11.4 ஓவர்களில் மிடில் ஆர்டரை (44 ரன்கள்) இழந்தது. மேலும் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சுழலில் தாக்குதல் நடத்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டாய் சரிந்தன. மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகப்பட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், தமிழ்நாடு வீரரான வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான வேகத்தில் ரன் சேர்த்தது.  முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து இருந்தது. கே.எல்.ராகுல், கில் ஆகியோர் களத்தில் உள்ளனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை  அன்று 2ஆம் நாள் ஆட்டம்  (காலை 9:30 மணிக்கு - ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டாரில் பார்க்கலாம்) நடைபெறுகிறது.

அப்போலோ ஜெர்சியுடன் இந்தியா

“ட்ரீம் 11” விலகல் காரணமாக சமீபத்தில் நிறைவு பெற்ற ஆசியக்கோப்பை தொடரில் ஸ்பான்சர் பெயர் இல்லா ஜெர்சியுடன் (உடை)  இந்திய அணி விளையாடியது. விளையாட்டு உலகில் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்தியா ஸ்பான்சர் இல்லா ஜெர்சியை அணிந்து விளையாடுகிறதா? என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  இந்நிலையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இந்தியா வழக்கம் போல ஸ்பான்சர் ஜெர்சியுடன் களமிறங்கியது. ஸ்பான்சரான அப்போலோ பெயருடன் இந்திய அணியின் ஜெர்சி காணப்பட்டது. அப்போலோ வாகன டயர் உற்பத்தி நிறுவனம் ஆகும். 

தமிழ்நாட்டில் புரோ கபடி இன்று தமிழ் தலைவாஸ் ஆட்டம்

12ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் திங்களன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், வெள்ளிக்கிழமை அன்று நடை பெறும் 62ஆவது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான தமிழ் தலை வாஸ் - ஹரியானா அணிகள் மோது கின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்ளரங்க மைதானத்தில் இந்த ஆட்டம் நடை பெறுகிறது. இன்றைய ஆட்டங்கள் உ.பி. யோதாஸ் - தில்லி நேரம் : இரவு - 8 மணி v v v தமிழ் தலைவாஸ் - ஹரியானா  நேரம் : இரவு 9 மணி இடம் : எஸ்டிஏடி மைதானம், சென்னை (சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே) டிக்கெட் பெற...  புக் மை ஷோ (https://in.bookmyshow.com/explore/kabaddi) இணையதளம் மூலமாக டிக்கெட்டுகள் பெறலாம்.