games

img

விளையாட்டு

உலக பாரா தடகள  சாம்பியன்ஷிப் பிரேசில் அபாரம் 4ஆவது இடத்தில் நீடிக்கும் இந்தியா

12ஆவது சீசன் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் தில்லியில் செப்., 27ஆம் தேதி தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து 2,200 பேர் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரின் 8ஆவது நாளான சனிக்கிழமை அன்று மாலை நிலவரப்படி பதக்கப்பட்டி யலில் பிரேசில் நாடு 12 தங்கம், 18  வெள்ளி, 7 வெண்கலம் என 37 பதக்கங் களை வென்று முதலிடத்தில் நீடிக் கிறது. சீனா 9 தங்கம், 16 வெள்ளி, 13 வெண்கலம் என 38 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், போலந்து 8 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 3ஆவது இடத்தி லும் உள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளன. தாய் லாந்து,  சுவிட்சர்லாந்து, கொலம்பியா, ஈரான், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. அமெரிக்கா 11ஆவது இடத்தில் உள்ளது. இன்றுடன் நிறைவு தில்லியில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இந்த உலக பாரா  தடகள சாம்பியன்ஷிப் தொடர் விடு முறை நாளான ஞாயிறன்று சிறப்பு நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் பதக்கப்பட்டியலில் முன்னேற அனைத்து நாட்டு வீரர் - வீராங்கனைகள் முயற்சிப்பார்கள் என்பதால்  இறுதிக்கட்ட விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2025 இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இந்த ஆட்டம், இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் நடைபெறுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்

இடம் : பிரேமதேச மைதானம், கொழும்பு, இலங்கை நேரம் : மதியம் 3:00 மணி  சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

களையிழந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

ஒரு காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என் றால் கிரிக்கெட் மற்றும் விளை யாட்டு உலகை தாண்டி, ஒட்டு மொத்த உலகிலும் பிரசித்தி பெற்ற நிகழ்வாக கொண்டாடப்படும். கிரிக்கெட் பற்றி தெரியாத நபர்கள் கூட இந்தியா - பாகிஸ்தான் போட்டி  என்ன ஆனது என கேள்வி எழுப்பு வார்கள். அதே போல இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த நாடு வெற்றி பெறும்? எந்த அணி, எவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்? சாதனை அம்சம்  எதாவது நிகழுமா? எந்த நாட்டு வீரர்கள் நட்சத்திரமாக ஜொலிப் பார்கள்? என்ற எதிர்பார்ப்புகளுடன் விவாதமும் இருக்கும்.  ஆனால் தற்போதைய சூழ்நிலை யில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ஆளும் கட்சிகளின் தனிப்பட்ட அரசியல் நிகழ்வு களால் கிரிக்கெட்டிற்குள் முன்னெப் போதும் இல்லாத அளவில் அர சியல் புகுத்தப்பட்டுள்ளது. இத னால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரசிகர்களிடையே ஆர்வமின்றி, சாதாரண உள்ளூர் போட்டி அந்தஸ்தை விட மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை அன்று தொடங்கியது. தொடக்கம் முதலே இந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் ஜடேஜா (104 ரன்கள் (சதம்) - 4 விக்.,) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.