tamilnadu

img

பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கரூர் துயரத்திலும் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணி பாஜக!

இராமநாதபுரம், அக். 3 - “யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர் வாழத் துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடு மையாக சாடினார். இராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர்,  ஆர்எஸ்எஸ் - பாஜகவை கடுமையாக சாடினார். தமிழகத்தின் மீது ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வன்மத்தை காட்டுகிறது. ஜிஎஸ்டி, நிதிப்பகிர்வில் ஓரவஞ்சனை, சிறப்பு திட்டங்கள் அறிவிக்காதது, பள்ளிக்கல்விக்கான நிதியை மறுப்பது, நீட், தேசிய கல்விக்கொள்கை, கீழடி அறிக்கைக்கு தடை, தொகுதி மறுவரையறை என  பாஜக அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை  செய்துகொண்டிருக்கிறது. தமிழகத்தை மூன்று முறை பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டபோது வராத ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜ ராத் மோர்பி பால விபத்து, உத்தரப் பிரதேசத் தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடி யாக விசாரணைக் குழுவை அனுப்பாத  பாஜக கரூரில் காட்டும் வேகத்திற்கு காரணம்  என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! அடுத்தாண்டு தேர்தல் வருவதால், இதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, யாரையா வது மிரட்டலாமா எனப் பார்க்கிறது. யாருடைய  ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர் வாழும் ஒட்டுண் ணியாகத்தான் பாஜக இருக்கிறது. அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட கட்சி தான்  பாஜக. கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத்  தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம்  வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும்,  எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதி தாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோல தமிழ்நாடு பாஜக கட்டுப் பாட்டில் வராது. மாநில நலன்களை பறித்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என செயல்படும் பாஜகவோடு கூட்டணி வைத்து அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. இந்த கூட்டணிக்கு ஏதா வது கொள்கை உள்ளதா?. குறைந்தபட்ச செயல் திட்டம் இருக்கிறதா? என்றால் இல்லை. தவறு செய்தவர்கள் அனைவரும் அடைக்கலமாகி தங்களின் தவறுகளில் இருந்து தப்பிக்கும் வாசிங் மெஷின்தான் பாஜக. அதில், உத்தம ராகிவிடலாம் எனக் குதித்திருக்கும் இபி எஸ்ஸுக்கு, கூட்டணிக்கு ஆள்சேர்க்கும் அசைன் மெண்ட் கொடுத்துள்ளனர். ஊர் ஊராக சென்று தங்கள் கூட்டணி யாராவது வருவார்களா என  பழனிசாமி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்  மைக் கிடைத்தால் போதும் என்று எல்லோ ரையும் திட்டிக்கொண்டிருக்கிறார்.  நாட்டு மக்களைத் துண்டாடும் ஆர்எஸ்எஸ்  கொள்கையை முழுவீச்சில் செயல்படுத்தியிருக் கும் அதிகார முகம் தான் பாஜக. மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் அவருடன் கூட்டணி வைக்கமாட்டார்கள். காமராஜரை கொல்ல முயற்சித்தது ஆர்எஸ்எஸ் இயக்கம்  தான். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டில்  அவர்களின் செயல்திட்டத்தை வேகப்படுத்தி யுள்ளனர். அவர்களை எதிர்க்கும் பணி அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியிலும் தொடரும்”  இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி யுள்ளார்.