விபத்தில் பலியானவர் உடல் உறுப்புகள் தானம்
ராணிப்பேட்டை,அக். 2- ராணிப்பேட்டை வாலாஜா வட்டம் அம்மூர் பேரூராட்சி வடக்கு சைதாப்பேட்டை பகுதி யைச் சேர்ந்தவர் மலர் (53). இவர் கடந்த 27ஆம் தேதி மருதாலம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து ராணிப் பேட்டை சிஎம்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தான மாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். பின்னர் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினரிடம் தனது சொந்த நிதி ரூ. 50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் ராஜி, வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் இருந்தனர்.