states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சட்ட வல்லுநர் ஜி.மோகன்

பாபர் மசூதி கட்டப்பட்டது முந்தைய கோவிலை அவமதிக்கும் செயல் என சமீபத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரசூட் பேசினார்.இந்த கருத்தின் அடிப்படையில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதற்கு போதுமான முகாந்திரம் உள்ளது.

சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி

லடாக் பகுதியில் பாகிஸ்தான் நபருடன் சோனம் வாங்சுக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. லடாக்கில் பாகிஸ்தான் நாட்டவர் சட்டவிரோதமாக தங்கி இருந்தால், இந்த மீறல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) தான் பதிலளிக்க வேண்டும். சோனம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் அல்ல. அவர் எப்படி எல்லை தாண்டி லடாக் வந்தார்? என்பதே கேள்வி.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகாரில் பாஜக - ஜேடியு கூட்டணி எத்தனை நாட்கள் அதிகாரத்தில் இருக்கின்றனவோ, அத்தனை நாட்கள் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையோருக்கு எதிராக வேலை செய்து, அவர்களுக்கு சேதம் விளைவிக்கும். அதனால் பீகார் மக்கள் கவனமாக இருப்பது நல்லது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்

சோனம் வாங்சுக் ஒரு அற்புதமான மனிதர். பல திறமைகளுடன் விளங்குபவர். அவர் ஒரு சிறந்த கல்வியாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர் மற்றும் காந்தியவாதி ஆவார். ஆனால் சோனமிற்கு இழைக்கப்படும் இந்த அநீதியான நடவடிக்கை முற்றிலும் கண்டிக்கத்தக்கது.