தோழர் பி.சீனிவாசராவின் 64 ஆவது நினைவு நாள் தமிழகம் தழுவிய நில மீட்பு போராட்டம்!
சென்னை, செப்.30- விடுதலைப் போராட்ட வீரர், விவ சாயிகள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்களின் உரிமைப் போராளி, அடித் தால் திருப்பி அடி என்ற முழக்கத்தின் மூலம் கீழத் தஞ்சையில் நிலச்சுவான் தார்களின் சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவு கட்டிய செங்கொடி இயக்கத்தின் தலைவர் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு நாள் செப்டம்பர் 30 ஆகும். அவரது நினைவு நாளில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம் சார்பில் செவ்வா யன்று மாநிலம் தழுவிய நில உரிமைப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து பகுதிகளிலும் குடி யிருக்கும் வீடுகளுக்கு பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, விவசாய தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம், கோவில், மடங் கள் மற்றும் சர்வ சமய நிலங்களில் பயிர் செய்யும் குத்தகை விவசாயிகளின் பாதுகாப்பு, முன்னோர்கள் பெயரில் உள்ள நிலத்தை அவர்களது வாரிசு தாரர்களின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடை பெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நக ராட்சித் திடலில் நடைபெற்றது. இந்த இயக் கத்திற்கு அகில இந்திய பொதுச் செயலாளர் விஜூ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். களத்திற்கு வந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சு.வேல்மாறன், சிபிஎம் மாவட் டச் செயலாளர் என். சுப்பிரமணியன், சங்கத் தலைவர்கள் ஆர்.டி. முரு கன், ஆர். தாண்டவராயன், பி. சிவ ராமன், கே. சுந்தரமூர்த்தி, கோ. மாத வன், வி. அர்ச்சுணன், ஜி. ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். இந்நிலையில், வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் நேரடியாக போராட்டக் களத்திற்கே வந்து கோரி க்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக புதுக்கோட்டை ஆட்சியர் உறுதி இதேபோல புதுக்கோட்டையில், குடிமனை - பட்டா கோரி, அரசு மகளிர் கல்லூரி அருகில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி யும், அதன் நிறைவாக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தார். விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி. வெங்கட் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் மு. அருணாவை சந்தித்து தலைவர்கள், பொதுமக்கள் அளித்த சுமார் 1500 கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்து, நடவடிக்கை எடுக்கு மாறு வலியுறுத்தினர். கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி யளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அ. ராமையன், விதொச மாவட்டச் செயலா ளர் டி. சலோமி, வி.ச. மாவட்டத் தலை வர் எஸ். பொன்னுச்சாமி, விதொச மாவட்டத் தலைவர் கே. சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். சங்கங்களின் மாவட்ட- ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் அதிக மானோர் பங்கேற்றனர். இதேபோல நடைபெற்ற நிலமீட்புப் போராட்டத்தில், விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தஞ்சாவூரிலும், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் நாகப் பட்டினத்தி லும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி. அமிர்த லிங்கம் மதுரையிலும், பொருளாளர் அ. பழனிசாமி தேனியிலும் பங்கேற்றனர்.